Share via:
சிபிஐ அலுவலக விசாரணையை தள்ளிப்போட விஜய் முயற்சி செய்தார். ஆனால்,
விடாப்பிடியாக அழைத்து சுமார் 6 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் கரூர் பிரச்சாரத்திற்கு தாமதமாக வந்தது தொடர்பாக
காவல்துறை அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் உள்ளிட்டோர்
வழங்கிய பதில்களில் இருந்த முரண்பாடு குறித்து விஜய்யிடம் விசாரணை நடத்தியதாக தகவல்கள்
சொல்லப்படுகிறது. மேலும் ஒரு நாள் விசாரணை இருக்கலாம் என்று சொல்லப்பட்ட நிலையில்,
நேற்றைய தினமே முடித்துக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணையை முடித்துக்கொண்டு
சிரித்த முகத்துடன் விஜய் வெளியே வந்தார் . கருப்பு நிற உடையில் காாின் சன்ரூப் வழியாக
நின்று கொண்டு தொண்டா்கள், ரசிகா்களை பாா்த்து கையசைத்தாா். விஜய் மகிழ்ச்சியுடன் காணப்படுவதைக்
கண்டு கூட்டணி முடிந்துவிட்டது என்றும் இல்லை என்றும் ஆளாளுக்கு ஒரு தகவல் தெரிவித்துவருகின்றனர்.
இந்த நிலையில் ஆதவ் அர்ஜூனா, ‘’அதிகாரத்தால் நம்மை முடக்க நினைத்தார்கள்,
அவதூறுகளால் நம்மை அழிக்க நினைத்தார்கள். ஆனால் மக்கள் ஆதரவு எனும் மகத்தான சக்தி முன்
இவை அனைத்தும் தோற்றுப் போனது. இனி நம்மை முடக்க நினைத்த அதே சாலைகளில் தமிழக வெற்றிக்
கழகத்தின் முழக்கம் ஓங்கி ஒலிக்கும்…’’ என்று பதிவு போட்டிருக்கிறார்.
இந்த நிலையில் டெல்லியில் இருந்து வெளியான இரண்டு சர்வே முடிவுகள்
விஜய்க்கு சாதகமாக இல்லை. சி வோட்டர் கருத்துக்கணிப்பு விவாதத்தில், ‘’விஜய்யின் வாக்கு
சதவீதம் இதுவரை 15 – 16 சதவீதத்தை கடக்கவில்லை. யாருடனும் கூட்டு சேராமல் இந்த தேர்தலில்
அவர் தனியாக போட்டியிட்டால், அவர் எதையும் வெல்ல முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.
அதிமுக தலைமையிலான கூட்டனியில் அவர் இணைய வாய்ப்புகள் உள்ளதாக
சில செய்திகள் வருகின்றன. அதன்படி அவர் இந்த கூட்டணியில் இணைந்தால் அது தேர்தலில் மிகப்பெரிய
மாற்றத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் திமுக கூட்டணிக்கும், அதிமுக கூட்டணிக்கும் இடையிலான
வித்தியாசம் 5 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. அதனால் விஜய் அதிமுக கூட்டணியில்
இணைந்தால், தேர்தல் முடிவுகள் முற்றிலும் வேறாக இருக்கும்.
அதேநேரத்தில் தனியாக போட்டியிடும் முடிவில் விஜய் உறுதியாக இருந்தால்,
அவர் சிறுபான்மை இன மக்களின் வாக்குகளை திமுகவிடம் இருந்து பிரிப்பார், அரசுக்கு எதிரான
வாக்குகளை அதிமுகவிடம் இருந்து பிரிப்பார். ஆனால் அவரால் எதையும் வெல்ல முடியாது. பிஹார்
மநிலத்தில் பிரசாந்த் கிஷோருக்கு நேர்ந்த கதிதான் விஜய்க்கு ஏற்படும். பிஹாரில் பிரசாந்த்
கிஷோர் 30 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளை பெறுவோம் என்று நினைத்தார். அவருக்கு அந்த
அளவுக்கு கூட்டம் வந்த்து. ஆனால் தேர்தலில் அவருக்கு 3 சதவீதம் வாக்குகளே கிடைத்தன.
விஜய் 15 சதவீதம் வாக்குகளை பெற்றாலும், அவரால் ஒரு தொகுதியில்கூட
வெற்றி பெற முடியாது. அதேநேரத்தில் அவர் அதிமுக கூட்டணியில் இணைந்தால், அது திமுக கூட்டணிக்கு
மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும்’’ என்கிறது.
அதேபோல் ஐஏஎன்எஸ் மேட்ரிஸ் கருத்துக்கணிப்பில், விஜய்க்கு 14
-15% வாக்குகள் கிடைக்கும் என்றும் 6 முதல் 12 சீட் மட்டுமே ஜெயிக்க முடியும் என்பதையும்
கூறியிருக்கிறது.
இவை எல்லாம் விஜய்யை கூட்டணிக்குத் தள்ளும் முயற்சியா என்பது இரண்டு
நாட்களில் முடிவாகிவிடும்.
