News

கூட்டணியை கோட்டை விட்ட விஜய்… வேட்பாளர்கள் எங்கேப்பா..?

Follow Us

இரண்டு கேட்டோம் ஒன்று கொடுத்தார்கள். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்று சொல்லி திமுக கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டார் வேல்முருகன்.

ஸ்டாலின் தலைவரான காலத்தில் இருந்து திமுகவுக்கு ஆதரவளித்தவர் வேல்முருகன். அவரது கட்சியை அடிமையாக்க நினைத்தது திமுக. அதிலிருந்து தப்பி வெளியே வந்திருக்கிறார்.

அதாவது, மதிமுகவை ஒன்றுமில்லாமல் முடித்துவிட்டார்கள். மார்க்சிஸ்ட் கட்சியும், திருமாவளவனும் புலம்பி வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வெளியேறும் முடிவை எடுத்துவிட்டார்.

இப்போது திமுகவில் வன்னியர் சமூகத்தை சார்ந்த எந்த கட்சியும் கூட்டணியில் இல்லை. இவரது முக்கியத்துவம் உணர்ந்து வேல்முருகனை எடப்பாடி பழனிசாமி சேர்த்துக்கொண்டால் கிட்டத்தட்ட 70 தொகுதியை ஓட்டுகள் சிதறாமல் ஒன்று சேர்க்கலாம் என்று அதிமுகவினர் ஆலோசனை சொல்கிறார்கள்.

ஆனால், வேல்முருகன் வைத்திருக்கும் 10 கோரிக்கைகளையும் அதிமுக ஏற்க முடியாது என்பதாலும் அன்புமணி அங்கே இருப்பதாலும் வேல்முருகனை இணைக்க முடியாத சூழல் நிலவுகிறது.

எனவே, இந்த கோரிக்கையை ஏற்கக்கூடிய ஒரே தலைவர் ராமதாஸ் மட்டும்தான். எனவே, அவர் கூட்டணியில் சேர வாருங்கள் என்று சசிகலா அழைப்பு விடுத்திருக்கிறார். இதை தவிர வேல்முருகனுக்கு வேறு வழியும் இல்லை என்பதே உண்மை.

அதே நேரம் திமுகவினர், ‘’கடந்த ஐந்து ஆண்டுகளில் பண்ருட்டி தொகுதிக்கு திரு. வேல்முருகன் வைத்த கோரிக்கைகளை எல்லாம் திமுக அரசு நிறைவேற்றியது. அதற்கு சான்று தான் பேரவையில் அவர் ஆற்றிய இந்தக் கூட்டத்தொடரின் இறுதி உரை. இரண்டு தொகுதிகள், இருபது தொகுதிகள் என எத்தனை வேண்டுமானாலும் கோரிக்கை வைக்க அவருக்கு உரிமை உண்டு. ஆனால் பிளாக்மெயில் செய்வது அநாகரிகமானது. அதே பண்ருட்டி தொகுதியில் மீண்டும் உதயசூரியன் தான் உதிக்கும்’’ என்கிறார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link