Share via:
தமிழக வாழ்வுரிமைக் கட்சியைத் தொடங்கி நடத்திவருகிறார் தி.வேல்முருகன்.
இவர் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளில் ஒன்றாக இடம் பிடித்து சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு
வெற்றியும் பெற்றுள்ளார்.
இவரது தமிழக வாழ்வுரிமைக் கட்சியை ஆங்கிலத்தில் டிவிகே என்று
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கிறார். இப்போது விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக
வெற்றி கழகத்தையும் டிவிகே என்றே பதிவு செய்திருக்கிறார்கள்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் வேல்முருகன்ன், ‘நடிகர்
விஜய் தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரை ஆங்கிலத்தில் டிவிகே என்று
வரும்படி பதிவு செய்திருக்கிறார்.
ஏற்கெனவே தமிழகத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி 2012ல் தொடங்கப்பட்டு
கேமரா சின்னத்தில் போட்டியிட்டுள்ளது. எனவே, சீனியாரிட்டி அடிப்படையில் எங்களுடைய கட்சியை
மட்டுமே டிவிகே என்று அழைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம்’ என்று
கூறியிருக்கிறார்.
வழக்கம்போல் இந்த விவகாரத்திற்கும் அமைதி காக்கிறார் விஜய்.
2026 தேர்தல் வரும் நேரத்தில் மட்டுமே வாயைத் திறப்பாரோ விஜய்..?