Share via:

தமிழக அரசு வெளியிட்டிருக்கும்
அறிவிப்பு படி வருண்குமார் மற்றும் அவரது மனைவி வந்திதா பாண்டே ஆகிய
இருவருக்கும்
ஒரே நேரத்தில் டி.ஐ.ஜியாக
பதவி உயர்வு கிடைத்துள்ளது. திருச்சி எஸ்.பியாக
இருந்த வருண்குமார் திருச்சி டி.ஐ.ஜியாக
மாறியிருக்கிறார். திண்டுக்கல் சரக
டி.ஐ.ஜியாக
வந்திதா பாண்டே நியமனம்
செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் சீமான் டீமை கலங்க வைத்திருக்கிறது.
ஏனென்றால் சீமானுக்கு
எதிராக டிஐஜி வருண்குமாரின் கிரிமினல் அவதூறு வழக்கு நாளை திருச்சியில் விசாரணைக்கு
வருகிறது. இந்த வழக்கில் சீமான் நேரில் ஆஜராக வேண்டும். விசாரணை நடக்கும். இந்த வழக்கில்
போலி டிவிட்டர் (X) கணக்குகளை தொடங்கி எஸ்பி குடும்பத்தினர் மீதும் அவரது குழந்தைகள்
மீதும் மனைவி மீதும் ஆபாச தாக்குதல் தொடுத்த குற்றச்சாட்டுகள் அடங்கியுள்ளன.
ஆகவே, சீமான் மட்டுமின்றி
சீமானுக்கு ஃபயர் விடும் அளவுக்கு தொடர்ந்து வருண்குமாரையும் அவரது குடும்பத்தையும்
மிரட்டி சமூகவலைதளத்தில் சீன் போட்ட நாம் தமிழர் கட்சியினரும் அலறிக் கிடக்கிறார்கள்.
நாளை சீமான் ஆஜராகவில்லை என்றாலும் தொடர்ந்து அதிக நாட்கள் தப்பிக்க முடியாது. ஆகவே,
வருண்குமார் திரள் நிதி விவகாரத்தையும் கையில் எடுத்து ஒட்டுமொத்தமாக நாம் தமிழருக்கு
ஆப்பு வைப்பார் என்று சொல்லப்படுகிறது.
அதேநேரம், இப்போதும் சீமான் ஆதரவாளர்கள் சிலர், ‘’தைரியம் இருந்தால் அண்ணனை கைது செய்து பாருங்கள், தமிழகமே தீப்பிடித்து எரியும்’’ என்றெல்லாம் எச்சரிக்கை எழுப்புகிறார்கள். தேவையில்லாமல் பீதியைக் கிளப்புறாங்களே