Share via:
தமிழக தேர்தல் சூடு பிடித்துவிட்டது. ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி என்று திமுகவினர் ஒரு பக்கம் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்க,
அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி அத்தனை பேருக்கும் ஈடு கொடுக்கும் வகையில் சுற்றிக்கொண்டு
இருக்கிறார்.
இந்த தேர்தலில் போட்டோவைக் காட்டி வாக்கு சேகரிப்பது தொடர்ந்து
நடைபெறுகிறது. பாஜக உள்ளே வந்துவிடும் என்று தொடர்ந்து திமுக பயம் காட்டிக்கொண்டே இருக்கிறது.
இதற்கு பதிலடியாக இபிஎஸ், ‘’பாஜக அரசு துரோகம் செய்கிறது என்கிறார் ஸ்டாலின். அந்தக் கட்சியோடு தான் நீஙக்ள் 1999, 2001 தேர்தல்களில்
கூட்டணி வைத்து, மத்திய அரசிலும் அங்கம் வகித்தீர்கள்.
இந்த போட்டோவைப் பாருங்கள். வாஜ்பாயை எப்படி காக்கா பிடிக்கிறார்கள் என்று பாருங்கள்.
அவர்கள் கூட்டணி வைத்தால் நல்ல கட்சி, நாம் கூட்டணி வைத்தால் மதவாதக் கட்சியா? இதுதான்
சந்தர்ப்பவாத அரசியல்…’’ என்று போட்டோவைக் காட்டி பேசுகிறார்.
அதற்கு பதிலடியாக உதயநிதி, ‘’ அதிமுக போர்வையை போர்த்திக்கொண்டு
பாஜக உள்ளே வருகிறது. முரட்டு பக்தர் பார்த்திருப்போம், ஆனால் முரட்டு அடிமையைப் பார்த்திருக்கிறீர்களா?
அப்படிப்பட்ட முரட்டு அடிமை தான் பழனிசாமி. இதைத்தான் நான் சொன்னேன், இது கெட்ட வார்த்தையா?
அவருக்குக் கோபம் வந்துவிட்டது, என்னைக் கண்டபடி திட்டுகிறார், அனுபவம் இல்லாதவன் என்றார்.
ஆமாம், எனக்கு அனுபவம் இல்லைதான், எந்த அனுபவம் (போட்டோவை காட்டுகிறார்) இது கார்ப்பெட்
இல்லை, கீழே ஒருத்தர் படுத்திருக்கிறார், இப்படித்தான் முதல்வரானார். மக்கள் நேரடியாக
பழனிசாமிக்கு வாக்களிக்கவில்லை. 2016 சட்டமன்றத் தேர்தலில் மறைந்த முதல்வர் அம்மையார்
ஜெயலலிதாவுக்குத் தான் மக்கள் வாக்களித்தனர். அவர் இறந்தபின்னர் இப்படித்தான் முதல்வர்
ஆனார் பழனிசாமி.
நான் தொடர்ச்சியாகப் பேசியதால் பிளேட்டை மாற்றிப்போட்டுவிட்டார். பன்பு இருக்கா? பண்புள்ள குடும்பத்தில் பிறந்தவரா? என்றெல்லாம் கேட்டு, எனக்குப் பொறுப்பைக் கொடுத்தார்கள் அதான் விழுந்தேன் என்றார். நான் ஆசி வாங்குவதைத் தவறு என்று சொல்லவில்லை, அந்த அம்மா காலில் விழுந்துவிட்டு, பின்னர் அவரது காலையே வாரிவிட்டார். உங்களால் நான் ஒன்றும் முதல்வர் ஆகவில்லை என்று கட்சியிலிருந்து நீக்கினார். அதைத்தான் தவறு என்றேன். இப்போது சசிகலா நம்ம பக்கம் வந்துவிட்டார், அதிமுகவுக்கு எதிராக பிரசாரம் செய்கிறார். அப்படி ஒரு பிரசாரத்தில் நான் சொன்னது உண்மைதான் என்று சொன்னார். மேலும், நாய்க்கு கூட நன்றி இருக்கும், பழனிசாமிக்கு நன்றியில்லை என்று கூறியிருக்கிறார். இதை நான் சொல்லவில்லை சசிகலா சொன்னார்..’’ என்று போட்டோவைக் காட்டி பேசுகிறார்.
வம்பு வளர்க்கிறாங்கப்பா.
