Share via:
தான் இசையமைத்த அத்தனை பாடலும் எனக்கே சொந்தம் என்று நீதிமன்றத்தில்
கூறியிருக்கிறார் இளையராஜா. நான் எல்லோருக்கும் மேலானவன் என்றும் வாதம் வைத்திருக்கிறார்.
இது, இளையராஜாவின் ரசிகர்களையும் நெளிய வைத்திருக்கிறது. ஏனென்றால்
சினிமா என்பது பணம் போட்ட தயரிப்பாளரின் சொத்து. அவர் அதை யாருக்கும் விற்கவோ குத்தகைக்கு
விடவோ உரிமை உண்டு.
அந்த சினிமாவைற்கு, இசை, எழுத்து, காட்சி அமைப்பு, நடிப்பு, இன்னபிற
செயல்களை செய்தவர் அனைவரும் ஊதியம் பெற்று உழைத்தவரே… அவர்கள் யாருக்கும் அதில் எந்த
பாத்தியமும் இல்லை. இன்னும் குறிப்பாகச் சொல்வது என்றால் சினிமா என்பது கூட்டியக்கம்.
பாடல் இல்லாமல் இசை இருக்கிறதா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கும்
நிலையில் கவிஞர் வைரமுத்து அவரது நெற்றித் தீயில் ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மனிதா!
நீ எழுப்பும் இசை
உடலால் விளைவதா?
உயிரால் விளைவதா?
உடலால் எனில்
உயிரை விட்டுவிடப்போமோ?
உயிரால் எனில்
உடலைச் சுட்டுவிடப்போமோ?
உயிர் உந்தி எழாமல்
உடல் சிந்திவிடாமல்
இசையேது இசை?
மொழியேது மொழி?
சுயமென்று ஏதுமில்லை;
எல்லாம் கூட்டியக்கம்
பிறக்கும் பிள்ளை
ஆணோ பெண்ணோ
பெறுவது மட்டும் ஆணும் பெண்ணும் – என்று எழுதியிருக்கிறார். இனியாவது
இளையராஜா அமைதி அடைவாரா அல்லது இதற்கும் ஒரு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவாரா..?