Share via:
சினிமாவில் பொம்பள பயில்வான் ரங்கநாதன் என்று பாடகி சுசித்ராவைச்
சொல்கிறார்கள். அவருக்கு பட வாய்ப்புகள் மற்றும் பாடல் வாய்ப்புகள் இல்லாத காரணத்தால்
ஒவ்வொரு மீடியாவுக்கும் சென்று பேட்டி கொடுத்து பணம் சம்பாதிப்பதை தொழிலாக செய்துவருகிறார்.
கமல் தொடங்கி தனுஷ், ஜெயம் ரவி விவகாரம் வரையிலும் பலருடைய அந்தரங்கத்தைப் புட்டுப்புட்டு
வைத்து வருகிறார்.
இந்த வகையில் கவிஞர் வைரமுத்துவும் சிக்கியிருக்கிறார். பாடகி
சின்மயி நீண்ட காலமாக கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறிவருகிறார்.
இத்தனை காலமும் சின்மயிக்கு ஆதரவு கொடுக்காத பாடகி சுசித்ரா இப்போது திடீரென கவிஞர்
வைரமுத்து மீது வீட்டுக்கு அழைத்து ஷாம்பு பாட்டில் கொடுத்த விவகாரத்தை குற்றச்சாட்டாக
வைத்திருக்கிறார்.
சுசித்ரா என்ன பேசினாலும் அதை பரபரப்புச் செய்தியாக சமூக வலைதளங்கள்
பரப்பி வருகின்றன. இதற்கு பதில் அளிப்பது போன்று இன்று கவிஞர் வைரமுத்து ஒரு பதிவு
வெளியிட்டுள்ளார். அந்த பதவில், ‘’வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத
ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உச்சமாய் மூளைப் பிறழ்வுக்கு ஆளாகும் சிலர்
ஒருதலையாய் நேசிக்கப்பட்டவர்கள்மீது வக்கிர வார்த்தைகளை உக்கிரமாய் வீசுவர்; தொடர்பற்ற
மொழிகள் பேசுவர் பைத்தியம்போல் சிலநேரமும் பைத்தியம் தெளிந்தவர்போல் சிலநேரமும் காட்சியளிப்பர்
தம்மைக் கடவுள் என்று கருதிக்கொள்வர் இந்த நோய்க்கு ‘Messianic Delusional
Disorder’ என்று பெயர் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்லர்; இரக்கத்திற்குரியவர்கள்;
அனுதாபத்தால் குணப்படுத்தக் கூடியவர்கள் உளவியல் சிகிச்சையும் மருந்து மாத்திரைகளும்
உண்டு உரிய மருத்துவர்களை அணுக வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்.
அதாவது சுற்றி வளைக்காமல் சுசித்ராவை பைத்தியம்னு சொல்லியிருக்கார்.
இதற்கு சுசித்ரா எப்படியெல்லாம் பேசப் போகிறாரோ..?