News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா தானாகவே வெளியேறுவார் என்று நினைத்த நிலையில், அவர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உட்கட்சி மோதலை உருவாக்கி வருகிறார். இந்த போராட்டத்தில் மல்லை சத்யா பேச்சு செம சூடு.

மதிமுகவிலிருந்து மூத்த தலைவர்கள் பலரும் கட்சியில் இருந்து வெளியேறிய பின்னரும், அமைதியாக கட்சியில் பணியாற்றி வந்தார் மல்லை சத்யா. ஆனால் துரை வைகோ வந்ததும் இருவருக்கும் இடையே அதிகா மோதல் ஏற்பட்டது. இதனால் மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என துரை வைகோ ஆதரவாளர்கள் தீர்மானம் போட்டனர். வைகோ தலையிட்டு இருவரையும் சமதானப்படுத்தினார் என்றாலும், அது சரியாகவில்லை. அது உண்ணாவிரதப் போராட்டத்தில் முடிந்திருக்கிறது.

தன்னை துரோகி என்று வைகோ சொன்னதை பொறுத்துக்கொள்ள முடியாத மல்லை சத்யா மதிமுகவில் உட்கட்சி ஜனநாயகத்தை பாதுகாக்கப்பதற்காக, வைகோவிடம் நீதி கேட்டும் சென்னை சேப்பாக்கத்தில் மல்லை சத்யா நேற்று உண்ணா விரதம் இருந்தார். இதில் அவருடைய ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இந்த போராட்டத்தில் பேசிய மல்லை சத்யா, “வைகோ என் மீது சுமத்திய துரோகப் பழியை துடைத்து எறிவதற்காக வைகோவின் தொண்டர்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரதம் இருந்தோம். மாபெரும் வெற்றியை உண்ணாவிரதப் போராட்டம் பெற்றுள்ளது. திராவிட இயக்கங்களின் லட்சியத்தை தொடர்ந்து கொண்டு செல்வோம்.

எங்களுக்கு உத்தரவிடும் அதிகாரம் தலைவர் வைகோவிற்கு மட்டுமே உண்டு. முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கு எங்களுக்கு உத்தரவிடும் அதிகாரம் கிடையாது. ஏனெனில் அவர் நேற்றைக்கு வந்தனர். நான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியில் உள்ளவன். சமசரத்திற்கு வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, வாய்ப்பு இல்லை என்ற ரீதியில் கையசைத்துவிட்டுச் சென்றவர். ஆகவே, மதிமுகவில் எங்களுக்கு கதவு சாத்தப்பட்டுவிட்டது. என்னை நீக்கும் அதிகாரம் வைகோவுக்கு உள்ளது. ஏன் என்னை நீக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. ஏதோ ஒரு நாடகத்தை அரங்கேற்றுவதற்கு அவ்வாறு செய்கிறார்கள்” என்று கூறினார்.

தனிக் கட்சி தொடங்கப் போகிறீர்களா என்ற கேள்விக்கு, “தமிழகத்தின் ஆகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவரான வைகோவால் கட்சியை நடத்த முடியவில்லை. நான் இயக்கத்தின் முன்கள பணியாளர்களாக நாங்கள் பணியாற்றினோம். துரை வைகோ போல ஏசி அறையில் தங்கி பாரா சூட்டில் மூலம் குதித்து அரசியலில் இறங்கியவர்கள் இல்லை. 32 ஆண்டுகளாக போராட்டங்கள், ஆர்பாட்டங்கள், பயணங்கள், பல பட்டினி போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். எனவே கட்சியில் இருந்து வெளியேறவில்லை” என்று தெரிவித்தார்.

இனியும் கட்சியில் நீடிக்க முடியாது என்ற நிலை இருப்பதை மல்லை சத்யா உணர்ந்துவிட்டார். எடப்பாடி பழனிசாமி அல்லது விஜய் கட்சியில் சேர்வதற்கு வாய்ப்பு உண்டு என்கிறார்கள்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link