Share via:
முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்ற பழமொழியை தற்போது நினைவுகூர வேண்டியுள்ளது. ஆம் அண்ணா பல்கலைக்கழக மாணவி தான் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானா சென்னை கோட்டூர்புர காவல்நிலையத்தில் புகார் அளித்த முதல் தகவல் அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் கன்னியாகுமரியை சேர்ந்த 2ம் ஆண்டு மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்து வரும் மாணவி அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி தனது காதலனுடன் பல்கலைக்கழக வளாகத்தில் தனிமையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதை நோட்டமிட்ட ஞானசேகரன் என்ற நபர், தன் நண்பருடன் சேர்ந்து அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை எடுத்து, 2 பேரையும் மிரட்டியுள்ளார். அதாவது இந்த வீடியோவை டீன் மற்றும் பேராசிரியரிடம் காண்பித்துவிடுவேன் என்று மிரட்டி, மாணவியின் காதலனை அடித்து உதைத்துள்ளனர். பின்னர் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து அதனையும் வீடியோ எடுத்துள்ளனர்.
மாணவி எவ்வளவு முயன்றும் தன்னை தானே காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. பாலியல் வன்கொடுமை வீடியோவை மாணவியின் தந்தைக்கு அனுப்பிவிடுவோம் என்று மிரட்டிய அந்த 2 பேரும், எங்களுடன் இருந்தது போல் இன்னொரு சாரிடம் தனிமையில் இருக்க வேண்டும் என்று மிரட்டிவிட்டு சென்றுள்ளனர். இருப்பினும் மாணவி மிகவும் தைரியமாக தனக்கு நடந்த கொடூரத்தை சென்னை கோட்டூர்புர காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் அதேபகுதியில் பிளாட்பாரத்தில் பிரியாணி கடை நடத்தி வரும் ஞானசேகரன் என்ற நபரை தனிப்படை போலீசார் வளைத்து பிடித்தனர். போலீசார் விரட்டிபிடித்த போது ஞானசேகரன் தப்பிக்க முயற்சித்த போது தவறி விழுந்து இடது கால் மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவி அளித்த முதல்தகவல் அறிக்கை வெளியான நிலையில் மாணவியின் தனிப்பட்ட விவரங்களும் வெளிவந்தது பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் காவல்துறை மீது எந்த தவறும் இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். அப்படி தனிப்பட்ட தகவலை வெளியிடுவோம் என்றால், மாணவி எப்படி தைரியமாக தனக்கு நடந்த கொடுமையை புகாராக அளித்திருப்பார் என்று பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதைத்தொடர்ந்து சட்டவிரோதமாக வெளியான மாணவியின் முதல் தகவல் அறிக்கை எந்தவிதமான சமூகவலைதளங்களிலும் பகிரப்படக்கூடாது என்று காவல்துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது. மீறி அதனை பகிர்ந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து அ.தி.மு.க., பா.ஜ.க.உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று போராட்டத்தில் குதித்துள்ளனர். நிலைமை இப்படியிருக்க கன்னியாகுமரியில் இருந்து வந்து விடுதியில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவிக்கு இருட்டில், காதலனுடன் இரவு நேரத்தில் என்ன வேலை?என்று கேள்வி எழுப்புகிறார்கள். எத்தனை நாட்கள் மாணவி, தனது காதலனுடன் இரவில் சந்தித்தாரோ? இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் தங்களுக்கு சாதகம் ஆக்கிக் கொண்டு குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார்கள் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். சட்டம் தனது கடமையை செய்யும் நேரத்தில் அனைவரும் தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை.