News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் திடீரென்று கோவையில் சந்தித்து பேசியுள்ளது அரசியல் களத்தில் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.


அ.தி.மு.க., பா.ஜ.க. இடையிலான கூட்டணி முறிவுக்கு பின்னர் இரு கட்சிகளின் ஒவ்வொரு நகர்வும் அரசியல் நோக்கர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மறைந்த தலைவர்களை அண்ணாமலை அவமரியாதையாக பேசிவிட்டார் என்பதை முன்னிறுத்தி பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முறித்துக் கொண்டார். எனவே அண்ணாமலை மாற்றப்பட்டு புதிய தமிழக பா.ஜ.க. தலைவர் நியமிக்கப்பட்டால் முறிந்த கூட்டணி மீண்டும் இணைந்து செயல்படுமா என்ற கேள்வியும் உலா வருகிறது.


இந்நிலையில் கோவை மாவட்டத்திற்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை புரிந்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் திடீரென்று சந்தித்து பேசியுள்ளனர். அதன்படி பொள்ளாச்சி ஜெயராமன, வரதராஜ் ஜெயராமன், அமுல்கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் மரியாதை நிமித்தமாக நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பின் போது பா.ஜ.க. எம்.எல்.ஏ.வானதி சீனிவாசனும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link