Share via:
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற வேலை வாய்ப்பு வழங்கும் விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசு பணிகளில் தேர்வு பெற்றவர்களிடம் கலந்துரையாடினார்.
நாடு முழுவதும் அரசுத்துறைகள் மற்றும் அரசு நிறுவனங்களில் மொத்தம் 51 ஆயிரம் பேர் 9வது ரோஜ்கர் மேளா நிகழ்ச்சி வாயிலாக அரசுப் பணியை பெற்றுள்ளனர். அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக இன்று (செப்.26) வழங்க உள்ளார்.
அதன் ஒரு பகுதியாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை எழும்பூரில் அமைந்துள்ள தனியார் ஓட்டலில் நடைபெறும் வேலை வாய்ப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது மத்திய அரசு பணிகளில் தேர்வு செய்யப்பட்டவர்களிடம் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார்.
இதுபோன்ற வேலைவாய்ப்பு விழா நிகழ்ச்சிகள் இந்தியா முழுவதும் மொத்தம் 46 இடங்களில் நடைபெற உள்ளது. வருகிற 2030ம் ஆண்டிற்குள் இந்தியாவில் குறைந்தபட்சம் 9 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.