Share via:
அவ்வப்போது சீமான் குறித்து வீடியோ வெளியிடுவதும் பின்னர் காணாமல்
போவதும் நடிகை விஜயலட்சுமியின் ஸ்டைல். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கேஸ் கொடுத்து
சீமானை விடவே மாட்டேன் என்று வீராப்பு காட்டியவர் அதன்பிறகு பெங்களூருக்குப் போய்விட்டார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வீடியோ வெளியிட்டு தேர்தல்
கால பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அந்த வீடியோவில் விஜயலட்சுமி, ‘’பெங்களூரில்
உள்ள உயரமான கட்டடத்தின் உச்சியில் நின்று கொண்டிருக்கிறேன். மீடியாக்கள் இந்த வீடியோவை
என் கணவரான சீமான் பார்க்கும் வரை ஒளிபரப்புங்கள் என மன்றாடி கேட்கிறேன். சீமான் மாமா
பெங்களூரில் நான் ரொம்ப கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
நான் உங்கக்கிட்ட ஆயிரம் சண்டை போட்டாலும் உங்க மேல எவ்வளவு அன்பு
வைத்துள்ளேன் என்பது உங்களுக்கு தெரியும். 14 வருஷமா நீங்கதான் என் கணவர் என்று நினைத்துதான்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன். உங்கக்கிட்டேயும் நான் சொன்னேன், என் கடைசி மூச்சு உள்ள
வரை நீங்கள்தான் என் கணவர் என வாழ்வேன் என்று. எதுக்கு எனக்கு இந்த தண்டனை? என்னால
உங்களை பிரிந்து வாழ முடியவில்லை.
தயவு செஞ்சு என்கிட்ட பேசுங்க. இந்த கோர்ட், கேஸு, சண்டை, சச்சரவெல்லாம்
தேவையில்லை. நான் ஒன்றும் உங்களின் கள்ளக்காதலி கிடையாது நீங்கள் யாருக்கும் பயப்பட
வேண்டியது இல்லை. பின்னாடி வந்தவங்களுக்கே இவ்ளோ பொஸஸிவ்னஸ் இருக்குன்னா, 2008ல் இருந்து
நீங்கள்தான் என் உயிர் என்று வாழ்ந்துட்டு இருக்கும் எனக்கு எவ்ளோ பொஸஸிவ்னஸ் இருக்கும்.
அது ஒன்றும் தப்பு கிடையாது.
நான் இங்கே இருநது குதிச்சா, தமிழ்நாட்டு மக்கள் உங்களை சும்மாவிட்டுறுவாங்களா?
அப்புறம் உங்க நிலைமை என்னவாகும்? யாரை தண்டிக்க இப்படி பண்றீங்க மாமா? நீங்க இப்படி
செய்தால் நான் வேற ஒருத்தர கல்யாணம் பண்ணிப்பேன்னு நினைக்கிறீங்களா கண்டிப்பா பண்ண
மாட்டேன். போன வருஷம் சமாதானமா பேசுனீங்க, மதுரை செல்வம் பண்ணின தப்புக்கு நான் தண்டனை
அனுபவிக்கனுமா. தமிழ்நாடு மீடியா என் கணவர் சீமானை என்னோடு சேர்த்து வையுங்க.. எனக்கு
என் கணவர் வேண்டும்..’’ என்று பேசியிருக்கிறார்.
தமிழகத்தில் தேர்தல் நெருங்குவதால் இப்படி வீடியோ போட்டால் சீமான்
மூலம் பேச்சுவார்த்தை நடக்கும் பணம் செட்டில் ஆகும், அதற்காகவே இந்த பில்டப் என்கிறார்கள்.