Share via:
தமிழகத்தில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் வரும் ஜனவரி 19 முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த போட்டியின் நிறைவு நாளில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பரிசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று டெல்லி செல்கிறார் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
நாளை பிரதமர் மோடியை சந்திப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரையும் சந்தித்து நேரில் வருவதற்கு வலியுறுத்துவார் என்று தெரிகிறது.
இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதியிடம், வெள்ள நிவாரண நிதி கேட்டும் வலியுறுத்துவீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து முதல்வர் ஏற்கெனவே கேட்டிருக்கிறார் என்றாலும், மீண்டும் வலியுறுத்துகிறேன் என்றும் கூறியிருக்கிறார்.
ஆக, மீண்டும் மோடியை வரவழைத்து கோ பேக் மோடி டிரெண்டிங் செய்ய வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் திட்டம் போல் தெரிகிறதே…