Share via:
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியிருக்கும் நடிகர் விஜய் சமீபத்தில்
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள்
வழங்கி சிறப்பித்தார். விஜய்யின் செயல் சமுகவலைதளங்களில் பாராட்டு பெற்றது.
இந்த விஷயத்தில் நடிகர் விஜய் செய்த பாராட்டை முறியடிக்கும் வகையில்
அதிக மாணவர்களுக்கு பாராட்டும் பரிசும் கொடுக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை
அமைச்சர் அன்பில் மகேஸ் மூலம் செய்துவருகிறார் அமைச்சர் உதயநிதி. பள்ளி மாணவர்களுக்கு
உதவி செய்வதன் மூலம் அவர்களுடைய குடும்பத்தினரையும் வாக்காளராக மாற்றும் நடிகர் விஜய்யின்
திட்டத்தை உடைப்பதற்காகவே இந்த விழாக்களில் உதயநிதி கலந்துகொள்வதாக சொல்லப்படுகிறது.
இன்று மாணவியருக்குப் பரிசளித்திருக்கும் உதயநிதி இன்று வெளியிட்டிருக்கும்
அறிவிப்பில், ‘’கல்விக்கு அனைத்து
வகையிலும் முக்கியத்துவம் அளித்து வரும் நம் திராவிட மாடல் அரசு, அதில் சாதனை படைப்போருக்கு
உரிய அங்கீகாரம் வழங்குவதிலும் ஈடுபாட்டுடன் செயல்படுகிறது.
அந்த வகையில் தமிழ்நாடு
பள்ளிக் கல்வித்துறை சார்பில் இன்று நடைபெற்ற விழாவில் 2023 – 2024ஆம் கல்வியாண்டில்
10, 12ஆம் வகுப்புகளில் 100% தேர்ச்சிபெற்ற தனியார் பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள்
வழங்கி, கவுரவித்தோம். மேலும் சர்வதேச – தேசிய – மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகளில்
சாதித்துள்ள நம் தமிழ்நாட்டு பள்ளி மாணவச் செல்வங்களையும் பாராட்டி சான்றிதழ்களை வழங்கி
மகிழ்ந்தோம்.
அரசுப்பள்ளிகள் மட்டுமின்றி,
தனியார் பள்ளிகளின் முன்னேற்றத்திற்கும் நம் அரசு துணை நிற்கும் என உரையாற்றினோம்.
பாராட்டுச் சான்றிதழ் பெற்றுள்ள அனைவரும் தொடர்ந்து சாதிக்க வாழ்த்துக்கள்’’ என்று
தெரிவித்திருக்கிறார்.
எப்படியோ மாணவர்
சமுதாயத்திற்கு நல்லது நடந்தால் சரி தான்.