Share via:
அமைச்சர் உதயநிதியின்
முயற்சியின் காரணமாக சென்னையில் கடந்த
ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறுவதாக
இருந்த தனியார் நிறுவனத்தின் பார்முலா
– 4 கார் பந்தயம், மிக்ஜாம் புயல்
மற்றும் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
அப்போதே இந்த போராட்டத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இனி, போட்டி நடைபெறாது
என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 1 முதல் சென்னையில்
ரேஸ் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாள்தோறும்
அரங்கேறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட
சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள், சர்வதேச
அளவிலான போதைப் பொருள் கடத்தல்
மற்றும் விற்பனையில் திமுகவினருக்கு தொடர்பு, அத்தியாவசியப் பொருட்களின்
விலைவாசி உயர்வு, என ஒட்டுமொத்த
தமிழக மக்களையும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கும் திமுக அரசு, மக்கள்
நலனில் சிறிதும் அக்கறையின்றி கார்பந்தயம்
நடத்த தீவிரம் காட்டுவது ஏன் என்று அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
இந்த போட்டிக்கு
விளம்பரதாரர்கள் எனும்
பெயரில் கட்டாய நிதி வழங்கும்
படி தொழிலதிபர்களையும், தொழில்
நிறுவனங்களையும் திமுக அரசு கட்டாயப்படுத்துவதாக
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். அவரது அறிக்கையில், ‘’தமிழ்நாட்டிலுள்ள
சிறு தொழில் அதிபர்கள், தொழில்
முனைவோர் மற்றும் தொழிலதிபர்கள் அனைவரும்
உதயநிதியின் மோட்டார் பந்தய நிகழ்ச்சிக்
கனவுகளை நனவாக்க, நிதி வழங்க
வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மாசுக்கட்டுப்பாடு
வாரிய அதிகாரிகள், ஒவ்வொரு நிறுவனங்களிடம் இருந்தும்,
₹25,000 முதல் ₹1,00,00,000 வரை வசூல் செய்யப்
பணிக்கப்பட்டுள்ளனர். இந்த நிதி, “ரேசிங்
ப்ரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்” (Racing Promotions Private Ltd) என்ற நிறுவனத்தின் பெயரில்
வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் கேட்கும் நிதி
வழங்கப்படவில்லை என்றால், நிறுவனத்தின் மீது,
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் நடவடிக்கைகளை
நிச்சயம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற நிலை நிலவுகிறது.
இந்த “ரேசிங் ப்ரோமோஷன்ஸ் பிரைவேட்
லிமிடெட்” நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக
இயக்குநராக, கோபாலபுர இளவரசரின் நெருங்கிய
நண்பரான அகிலேஷ்
ரெட்டி என்பவர் இருப்பது தற்செயலானது
அல்ல. இந்த நிறுவனத்தின் வருமானம்
மற்றும் நிதி அறிக்கைகளை, பொதுவெளியில்
வெளியிட வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
இதுகுறித்து டிடிவி
தினகரன், ‘’கார் பந்தயங்களை
நடத்துவதற்கென சென்னை அடுத்த இருங்காட்டுக்
கோட்டையில் பிரத்யேக மைதானம் இருக்கும்
நிலையில், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, அண்ணாசாலை,
துறைமுகம் என எந்நேரமும்
மக்கள் நடமாட்டம் இருக்கும் சென்னையின்
மத்தியப் பகுதி சாலைகளைச் சுற்றி
கார்பந்தயம் நடத்தியே தீருவோம் என
விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் பிடிவாதம்
காட்டுவது ஏன் ?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இந்த விவகாரத்துக்கு
உதயநிதியோ தி.மு.க.வினரோ இதுவரை எந்த பதிலும் சொல்லாமல் இருப்பதைப் பார்க்கும்போது,
உண்மைதானோ என்றே தோன்றுகிறது.