Share via:
கடுமையான எதிர்ப்புகளை வென்று ஃபார்முலா 4 கார் ரேஸ் நடத்தி உதயநிதி சாதனை நிகழ்த்திவிட்டார் என்று உடன்பிறப்புகள் வெற்றிக் கொடி கட்டுகிறார்கள். ஃபார்முலா ரேஸ் நடத்துவதன் மூலம் உலகமே சென்னையைத் திரும்பிப் பார்த்திருக்கிறது என்றும் தி.மு.க.வினர் முட்டுக் கொடுக்கிறார்கள்.
கார் ரேஸ் நடத்தும் அளவுக்கு தரமான சாலைகள் போடுவதை சாதனையாகச் சொல்லும் உதயநிதிக்கு, தமிழகம் முழுக்க நல்ல சாலைகள் போட வேண்டும் என்ற சிந்தனை ஏன் தோன்றவில்லை. ஒவ்வொரு ஊரிலும் மேடு பள்ளங்களில் விழுந்து காயம் அடைபவர்களும் உயிரைத் துறப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
கார் ரேஸ் நடத்தும் மேல் தட்டு மனிதர்கள் மட்டும் அலுங்காமல் குலுங்காமல் வேகமாக வண்டி ஓட்டும் தருணத்தில், ஓட்டுப் போடும் மக்கள் மட்டும் மரண சாலைகளில் பயணிக்க வேண்டுமா..? இது தான் திராவிட மாடலா உதயநிதி..? ஓட்டுப் போடுவது மட்டுமின்றி தங்கள் வாழ்க்கை மாறப் போகிறது என்று நம்பும் மக்களுக்கும் கொஞ்சம் கருணை காட்டுங்க அமைச்சரே…