Share via:
தானுண்டு தன்னுடைய வேலையுண்டு என்று எதிலும் சிக்காமல் போய்க்கொண்டிருக்கும்
அஜித்தை வைத்து தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் கட்டி உருண்டு வருகிறார்கள். துணை முதல்வர்
உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்த நாள் வாழ்த்து கூறினார் என்பதையொட்டி இந்த சர்ச்சை
பெரிதாகியுள்ளது.
அஜித் உதயநிதிக்குப் பிறந்த நாள் வாழ்த்து கூறியது குறித்துப்
பேசின் தி.மு.க.வினர், ‘’’நடிகர் அஜித்தும் உதயநிதியும் நல்ல நண்பர்கள். இருவரும் தொடர்ந்து
பேசி வருவதன் விளைவாகவே பன்னாட்டு கார் பந்தயங்களில் அஜித் அவர்கள் பங்கேற்கும் போது
அவரது உடை,கார் என அனைத்திலும் தமிழ்நாடு அரசின் SDAT logo-வை பயன்படுத்தியுள்ளார்.
நேரடியாக துணை முதலமைச்சர் பேசிவருவதால் உலக அரங்கில் நமது தமிழ்நாட்டு விளையாட்டு
ஆணையத்தின் பெயரை எடுத்துச் செல்ல வைத்திருக்கிறது.
யாருக்கும் வாழ்த்து சொல்லாத அஜித் முதன்முதலாக அஜித்துக்கு வாழ்த்து சொல்லிய விஷயம்
தி.மு.க.வினரை நன்கு குஷிப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அஜித் நம் துணை முதலமைச்சருக்கு
நேற்று பிறந்தநாள் வாழ்த்து கூறியது தெரியாமல், மிரட்டி வாழ்த்து கூறியதாகவும், அஜித்
சொல்லாத வாழ்த்தைச் சொல்லி ஏமாற்றுவதாகவும் விதண்டாவாதம் செய்கிறார்கள். அ.தி.மு.க.வினருக்கும்
வேறு வேலை இல்லை’’ என்று கிண்டல் செய்திருக்கிறார்கள்.
இதற்கு அ.தி.மு.க.வினர், ‘’அரசியலுக்கு
அப்பாற்பட்டவராக இருந்தாலும், தீவிரவாதிகளின் ஆதரவுடன் செயல்படும் அரசியல்
கட்சிகளால் அஜித் மிரட்டப்படுவது போல்
தெரிகிறது. ஆனால் அஜித் திரைப்படங்கள்
விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, இது
அவரது தயாரிப்பாளரின் பாதுகாப்பு நடவடிக்கை. ஏனென்றால்
விளையாட்டு ஆணையம், விளையாட்டு வீரர்களுக்கான 3% இடஒதுக்கீடு போன்றவைகளை கொண்டுவந்தது அம்மா
தான். அவர் உதயநிதிக்கு வாழ்த்து சொல்லவில்லை என்று இன்னமும் அடம் பிடிக்கிறார்கள்.
அஜித் நேரடியா சொல்லிடுங்களேன்.