Share via:
இத்தனை காலமும் சினிமா படப்பிடிப்புக்கு இடையில் ஏகப்பட்ட கார்
பந்தயத்தில் கலந்துகொண்டவர் நடிகர் அஜித். இத்தனை காலமும் இல்லாத வகையில் திடீரென அஜித்துக்கு
வாழ்த்துச் சொல்லி இருக்கிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். விஜய்க்கு எதிராக அஜித்
ரசிகர்களை அரசியல் களத்தில் இறக்கும் முயற்சி என்ற விமர்சனம் எழுந்துள்ளது
துபாயில் நடைபெற உள்ள ஜிடி3 கோப்பை கார் பந்தய போட்டிகளில் நடிகர்
அஜித் பங்கேற்க இருக்கிறார். இதற்காக, அஜித் பயிற்சி எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி
வருகிறது. ’அஜித்குமார் ரேசிங்’ என்ற பெயரில் ஒரு அணியை நிர்வகித்து வரும் நடிகர் அஜித்குமார்
அந்த அணி சார்பில் ஃபாபியன் ட்ஃபெக்ஸ்வில் என்பவரை அதிகாரப்பூர்வ ஓட்டுநராக அறிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் துபாயில் நடைபெற உள்ள ஜிடி3 கோப்பை கார் பந்தய போட்டிகளில்
பங்கேற்க இருக்கும் அஜித்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “உலக அளவில் சிறப்புக்குரிய 24H Dubai 2025
& The European 24H Series Championship – Porsche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில்
பங்கேற்கவுள்ள நடிகரும், நண்பருமான அஜித்குமார் சாருக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகள்’
என்று தெரிவித்திருக்கிறார்.
இதற்கு விஜய் ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். விஜய்யை
தனியே எதிர்க்க தில் இல்லாமல் அஜித்துக்குப் பின்னே இப்படி அலையலாமா? அசிங்கமாக இல்லையா?
அஜித் நேரடியாக கருணாநிதியிடம் கேள்வி கேட்டவர், அவரும் அவரது ரசிகர்களும் நிச்சயம்
ஆதரவு தர மாட்டார் என்று உதயநிதியை கிண்டல் செய்கிறார்கள்.
அதேநேரம் தி.மு.க . உடன்பிறப்புகள், ‘’தமிழ்நாட்டு விளையாட்டுத்
துறையின் லோகோவை ‘அஜித்குமார் ரேசிங்’ யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம்
தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தியிருப்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. திராவிட
மாடல் அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்கள் – சென்னை கார் பந்தயம் போன்ற
முன்னெடுப்புகளை வாழ்த்தியதற்கு நன்றி. விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில்
உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம்’’ என்றே வாழ்த்தியிருக்கிறார். உதயநிதி விளையாட்டுத்
துறை அமைச்சர் என்பதாலே அந்த துறைக்காக இப்படி பாராட்டு தெரிவித்திருக்கிறார். ஓரமா
போய் விளையாடுங்க அணில் குஞ்சுகளே’’ என்று காரசாரமாக விமர்சனம் செய்கிறார்கள்.
சமூகவலைதளம் பற்றி எரிகிறது.