Share via:
0
Shares
நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், தொடர்ச்சியாக
பல்வேறு துறைகளின் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர். சமீபத்தில்
தமிழ்நாட்டில் 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.
இந்த நிலையில் இரண்டு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து
தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி காகர்லா உஷா மற்றும் சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ். ஆகியோர்
டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர்.
டூரிசம் துறையில் இருந்த காகர்லா உஷா ஹவுசிங் துறைக்கும் ஹவுசிங்
துறையில் இருந்த சமயமூர்த்தி டூரிசம் துறைக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான
உத்தரவை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.
தேர்தல்
காரணமாக மட்டுமே இந்த மாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
Tagged latest