News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நிர்மலா சீதாராமன் ஒன்பதாவது ஆண்டாக தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட்டில் இரண்டு பேராபத்து இருப்பதாக சமூகநல ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். அவற்றில் ஒன்று தனியாருக்குச் செல்லும் கனிமவளம் இரண்டாவது ஆர்.டி.ஐ. சட்டத்துக்கு மூடு விழா.

இதுகுறித்துப் பேசும் சமூகநல ஆர்வலர்கள், ‘’மத்திய அரசு ஏற்கெனவே அணுக்கனிமம் முதல் அரியவகை முக்கியக் கனிமங்கள் வரை அனைத்தையும் தனியார் நிறுவனங்கள் அகழ்ந்தெடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இக்கனிமங்கள் கண்டறியப்பட்ட இடங்களை ஏலமிடும் உரிமையும் ஒட்டுமொத்தமாக ஒன்றிய அரசிடம் சென்றுவிட்டது.

தமிழ்நாடு அரசு இதனை ஏற்கெனவே எதிர்த்துள்ளது. அரியவகைக் கனிமங்களை அகழ்ந்தெடுப்பது, பிரித்தெடுத்தல், ஆய்வுகள், உற்பத்தி மற்றும் அதுசார்ந்த வேலைகளை ஊக்குவிக்கும் வகையில் தாதுக்கள் நிறைந்த தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் அரியவகைக் கனிமங்களுக்கான வழித்தடங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு அணுவுலை மின்சார உற்பத்திக்குத் தேவையான பொருட்கள், சில குறிப்பிட்ட அணுமின் நிலையங்களை நிறுவுவதற்கான உபகரணங்கள் இறக்குமதிக்கு சுங்க வரி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவை சுற்றுச்சூழலில் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால், அதை பற்றிய கவலை பாஜக அரசுக்கு இருப்பதாகவே தெரியவில்லை.

அதேபோன்று பொதுமக்களின் வரப்பிரசாதமாக இருக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டமான ஆர்.டி.ஐ. மறு பரிசீலனை செய்ய பரிந்துரை செய்துள்ளது.

இந்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் வகையில், குடிமக்கள் அவற்றின் செயல்பாடுகள் குறித்த தகவல்களைப் பெறும் உரிமையை, அவர்கள் கையில் ஆயுதமாகவே வழங்கிவருகிறது, தகவல் அறியும் உரிமைச் சட்டம்.

தரவுகளின்படி, சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட 2005-ல் இருந்து 2022 வரை, இந்தியா முழுக்கவிருந்து 4 கோடி விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில், கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் இருந்து மட்டுமே 24% விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவையெல்லாம், மக்களுக்கு இச்சட்டம் குறித்து கிடைத்துள்ள விழிப்புணர்வுக்கு எடுத்துக்காட்டு.

சாதாரண குடிமக்களின் ஆர்.டி.ஐ மனுக்கள், பஞ்சாயத்து அலுவலகம் முதல் பிரதம மந்திரி அலுவலகம் வரை அலற வைக்கின்றன. ஆர்.டி.ஐ மனுக்கள் மூலம் பெறப்பட்ட விவரங்கள், பல அக்கிரமங்களை வெளிக்கொண்டு வருகின்றன.

எனவே, அதிகாரபூர்வமான முடிவுகள் எடுக்கப்படும் வரை, தகவல்களை வெளியிடுவதில் விலக்கு வேண்டும், சில குறிப்பிட்ட தகவல்களை வெளிப்படுத்துவது நிர்வாகத்தை பாதிக்கும் என்பதால் இதனை மறுப்பதற்கு அதிகாரம் வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறார்கள். ஆகவே, ஆர்.டி.ஐ சட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

பாஜக என்றால் ஜனநாயகத்துக்கு ஆபத்து என்பது மீண்டும் ஒரு முறை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link