Share via:
0
Shares
கியூபாவில் இன்று (11/11/2024) அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. தீவு நாடான கியூபாவில் பர்டோலேமே மாசோ பகுதியில் முதலில் ரிக்டர் அளவில் 5.9 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது .
அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது . இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது . அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் மக்கள் பயத்தில் இருந்தனர் .
அதை தொடர்ந்து அருகில் உள்ள ஜமைக்காவில் உள்ள உள்ளூர் ஊடகங்களும் அதிர்வுகளை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர் .
நிலநடுக்கம் காரணமாக பெரிய சேதம் அல்லது காயங்கள் ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை .
நிலநடுக்கத்தின் மையம் கியூபாவின் பார்டோலோம் மாசோவில் இருந்து 40 கிலோமீட்டர் தெற்கே வரை உணர்ந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
இந்த நிலநடுக்கதால் மின்சார கம்பிகள் துண்டிக்கப்பட்டன. அதனால் மக்கள் இருளில் சிக்கித்தவிக்கின்றனர் .
லண்டனில் இது தான் படித்தாரா அண்ணாமலை..? பொன்முடி சேறு சம்பவத்தில் உண்மையில் நடந்தது என்ன..?
Read More »
December 4, 2024
No Comments
Tagged latest