Share via:
வரும் 23ஆம் தேதி, பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் என்.டி.ஏ.
பொதுக்கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை நாளை வெளிப்படையாக அறிவிக்கிறார் டிடிவி தினகரன். அமமுகவின்
அனைத்து மாவட்டத் தலைவர்களும் அதிகப்படியான வண்டிகளில் வர வேண்டும் என்று இப்போது வாய்மொழி
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ஆகியோர்
பங்கேற்பதும் உறுதியாகியுள்ளது.
இப்போது பன்னீரின் நிலையே பரிதாபமாக உள்ளது. இவர் அமமுகவில் இணைந்து
பயணிக்க முடியாமல், தனிக்கட்சி தொடங்கவும் வழியின்றி கூட்டணிக்குள் நுழைய முடியாமல்
தவிக்கிறார். அதேபோல் சசிகலாவும் வழியின்றி விழிக்கிறார். இவர்கள் இருவரையும் ஒன்று
சேர்த்து உள்ளே கொண்டுவரவும் முயற்சிகள் நடக்கின்றன.
பங்காளி பிரச்சனையை பிரிதொருநாளில் வைத்துக்கொள்வோம் ! நம் முன்னே
உள்ள பகையாளியை வீட்டுக்கு அனுப்பவேண்டிய கட்டாய தருணத்தில் இருக்கிறோம்.. ! இதை அதிமுகவும்
உணர்ந்து இருக்கிறது அமமுகவும் உணர்ந்து இருக்கிறது …
தேமுதிக பேச்சுவார்த்தை இன்னமும் முடிவுக்கு வரவில்லை என்றாலும்,
பிரேமலதா திமுக கூட்டணிக்குச் செல்வதற்கு வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது.
அதேபோல் டாக்டர் ராமதாஸ் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பதும்
புரியாத புதிர். தமிழகத்தில் தேர்தல் ஆட்டம் களைகட்டிவிட்டது.
