கருத்துக் கணிப்புகளை எல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டு அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்கவுள்ளார் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப். அவர் பெற்றுள்ள தேர்வாளர் குழு வாக்குகள் 294. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ் 223 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளார் டிரம்ப் என்பது குறிப்பிட வேண்டிய ஒரு அம்சம்.

மோடியின் நண்பர் டொன்னால்ட் டரம்ப் வெற்றியை தங்களுடைய வெற்றியாக இந்தியர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதேநேரம், கிரீன் கார்டு கோர்க்கை கோரி காத்திருக்கும் 10 லட்சம் இந்தியர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற கொள்கைப் பிடிப்புடன் இருக்கிறார் டிரம்ப். 

அதேபோல், “இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை நிறுத்தவும் அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களை அதிகரிப்பதிலும் டிரம்ப் அதிக முக்கியத்துவம் கொடுப்பார் என்பதால் இந்திய பொருளாதாரத்துக்கு ஆபத்து வரும். மேலும் பெண்கள், பால் புதுமையினர் (LGBTQIA+) சமூக நல ஆர்வலர்களுக்கு எல்லாம் டிரம்பின் வரவு நிச்சயம் நல்லதல்ல. அவரால் பயனடையப்போவது அவரது பணக்கார நண்பர்கள் மட்டும் தான்’’ என்கிறார்கள்.

நம்மூரில் மோடியால் பணக்கார நண்பர்கள் பயன் அடைவது போலவே அமெரிக்காவிலும் ஒரு மோடி உதயமாகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link