News

கூட்டணியை கோட்டை விட்ட விஜய்… வேட்பாளர்கள் எங்கேப்பா..?

Follow Us

ஸ்டாலின் அனைத்துக் கட்சிகளையும் அனுசரித்துச் செல்வதாலே, கூட்டணிக் கட்சிகள் மிரட்டுவதாக திமுகவினர் கடுப்பாகிறார்கள்.  வேல்முருகன் போன்றவர்கள் அழுத்தத்திற்கு பணியாதது போன்று விசிக, கம்யூனிஸ்ட்களுக்கும் பணியக்கூடாது என்று குரல் கொடுக்கிறார்கள்.

இதுகுறித்து பேசும் திமுகவினர், ‘’தேர்தலுக்குத் தேர்தல் ‘கட்சி வளர்ந்துள்ளது’ என்ற பெயரில் கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்துகின்றன. மொத்தம் இருப்பது அதே 234 தொகுதிகள் மட்டும்தான். பிறகு எப்படி முந்தைய தேர்தலை விட அதிக இடங்கள் ஒதுக்க முடியும்?

கூட்டணிக் கட்சிகள் வளர்ந்துள்ளன என்றால், கூட்டணிக்கான தலைமைக் கட்சியும் வளர்ந்திருக்கும்தானே? திமுக எவ்வளவு கூட்டங்களை நடத்தி உள்ளது? எவ்வளவு இளைஞர்களைச் சேர்த்துள்ளது? அப்படியென்றால் அதுவும் ‘வளர்ச்சி’ என்ற பெயரில் தனக்கான சீட்டுகளை ஏற்றிக்கொண்டே போனால் பிற கூட்டணிக் கட்சிகள் ஒப்புக்கொள்வார்களா?

புதிய கட்சிகள் கூட்டணியில் சேரும்போது கூட்டணிக்கான தலைமைக் கட்சியில் இருந்து கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் வரை எல்லோரும் சீட்டுகளை விட்டுத் தருவதுதானே நியாயம். ஆனால் இதையெல்லாம் பார்க்காமல் அல்லது தெரிந்தும் கண்டுகொள்ளாமல் ”திமுக தன் கூட்டணிக்கட்சிகளுக்கு சீட்டை அதிகம் கொடுக்க வேண்டும். திமுக விசிகவுக்கு 10க்கு மேல் தர வேண்டும். சி.பி.எம்முக்கு 15 தர வேண்டும்” என்றெல்லாம் துளியும் நியாயம் இல்லாத பேச்சு.

அதிலும், இதுவரை திருமாவளவனை எதற்காகவும், எதிலும் ஆதரிக்காத ஆட்கள் எல்லாம் “அய்யோ அண்ணனை ஏமாத்திட்டீங்களே… அண்ணனுக்கு திமுக இப்படிலாம் பண்ணலாமா?” என கேட்கிறார்கள். காலக்கொடுமை. வம்பு செய்யும் கூட்டணிக் கட்சிகளை வெளியே போகச் சொல்லுங்கள். திமுக செய்த நன்மைகளால் இந்த முறை வெற்றி உறுதி எனவே கவலைப்பட வேண்டாம்’’ என்று ஸ்டாலினுக்கு அறிவுத்துகிறார்கள்.

என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்..?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link