Share via:
பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் விவசாயிகளை அழைத்துக்கொண்டு
கோட்டைக்கு வருவேன் என்று விஜய் கூறியிருந்த விவகாரம் திமுகவினருக்கு கடும் உஷ்ணத்தை
உருவாக்கியது. இதையடுத்து த்ரிஷா மீது போதை வழக்கு பதியப்படும் என்ற மிரட்டல் விடப்பட்டுள்ளதாக
செய்திகள் கசிகின்றன.
விரைவில் சுற்றுப்பயணம் செய்வதற்கு விஜய் திட்டமிட்டிருக்கிறார்.
இந்த பயணத்தின் போது திமுக ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்தவர்களைச்
சந்திந்து ஆறுதல் சொல்ல இருப்பதாகத் தெரிகிறது. இதையடுத்து திமுக சீரியஸ் நடவடிக்கையில்
இறங்கியிருக்கிறது. அதாவது த்ரிஷாவை வைத்து விஜய்யை மிரட்டியதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து விஜய் பல்டி அடித்திருக்கிறார். அதன்படி இப்போது விஜய்
கட்சியினர் புதிய தகவல் சொல்கிறார்கள். அதாவது, ‘’பரந்தூர் திட்டத்தை நிறுத்துவது
TVK-வின் நோக்கமல்ல. மக்களுடன் நின்று, அவர்கள் அரசிடம் எதை எதிர்பார்க்கிறார்களோ,
அதை அறத்துடன் நியாயமான வழியில் பெற்றுத்தருவது எங்கள் குறிக்கோள். திட்டத்தை நிறுத்த
வேண்டும் என அவர்கள் விரும்பினால், TVK முழு ஆதரவு அளிக்கும்…’’ என்கிறார்கள். அதாவது
கூடுதல் பணம் கொடுத்தால் போதும் என்ற அளவுக்கு மாறியிருக்கிறார்கள்.
இதற்கு த்ரிஷாவே துருப்புச்சீட்டு என்கிறார்கள். இது குறித்து
பேசும் தவெகவினர், ‘’சமீபத்தில் நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் போதை மருந்து
வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த போதை மருந்து சப்ளை வளையத்தில் த்ரிஷாவை சிக்க
வைப்பதற்குத் திட்டம் போடப்பட்டுள்ளது. இதையடுத்தே விஜய் சமாதானம் பேசி அமைதியாகிவிட்டார்.
இனி, தீவிரமாக திமுக எதிர்ப்பு இருக்காது. பொதுப்படையாக மட்டுமே எதிர்ப்பு இருக்கும்’’
என்கிறார்கள்.
பார்க்கலாம்.