Share via:
எனக்கு சம்பிரதாயத்தில்
எந்த நம்பிக்கையும் இல்லை, டைரக்டா உதவி மட்டும் தான் என்று அரசியல் செய்துவரும் நடிகர்
விஜய், ஃபெஞ்சல் புயல் பாதித்த பகுதிகளுக்கு நேரில் செல்லாமல் பனையூருக்கு கூட்டிவந்து
நிவாரண உதவி கொடுத்தார். அதேநேரம், தன் நெருங்கிய தோழி கீர்த்தி சுரேஷுக்குக் கல்யாணம்
என்றதும் கோவாவுக்கே நேரடியாகப் போய் நின்று ஆசிர்வாதம் வழங்கினார்.
இந்த விவகாரத்தில்
மக்களை கவனிக்காமல் விஜய் நடிகையைக் கவனிக்கச் சென்றார் என்பதைத் தாண்டி தனி ஃப்ளைட்டில்
த்ரிஷாவை எதற்குக் கூட்டிச் சென்றார் என்ற கேள்வி இப்போது செம வைரலாகி வருகிறது. ஏனென்றால்
மனைவி சங்கீதாவை பிரிந்து வாழ்வதாக சொல்லப்படும் விஜய் ரகசியமாக த்ரிஷாவை அழைத்துச்சென்றது
விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.
அதேபோல் எல்லா விழாக்களுக்கும்
புஸ்ஸி ஆனந்தை தன்னுடன் அழைத்துச்செல்லும் விஜய், இந்த விழாவுக்கு த்ரிஷாவை அழைத்துக்கொண்டு
போயிருக்கிறார். திருமண வீட்டுக்குச் செல்வது என்றால் அறிந்தவர், தெரிந்தவர்களை அழைத்துச்செல்வது
வழக்கம்தான். அந்த வகையில் த்ரிஷாவை அழைத்துக்கொண்டு போயிருக்கிறார் என்று அவரது ரசிகர்கள்
சமாளிக்கிறார்கள்.
அதேநேரம், புஸ்ஸி
ஆனந்திற்குப் பதிலாக பா.ஜ.க.வைச் சேர்ந்த சி.ராஜேந்திரன் என்பவரி அழைத்துச்சென்றது
பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அதாவது, விஜய்யை பின்பக்கமாக இயக்குவது பா.ஜ.க.
என்பது உறுதியாகியிருக்கிறது. விஜய்யின் அத்தனை நடவடிக்கைகளையும் பா.ஜ.க.வே முடிவு
செய்கிறது என்பதற்கு இதுவே சாட்சி என்கிறார்கள்.
சினிமா நடிகராக இருக்கும்
வரையில் தனிப்பட்ட வாழ்க்கை என்பது வேறு. அரசியலுக்கு வந்துவிட்டால் எல்லா நேரமும்
எல்லா விஷயத்தையும் கேள்வி கேட்கவே செய்வார்கள். ஆகவே, சங்கீதாவை அழைத்துச்செல்லாமல்
த்ரிஷாவை அழைத்துச்சென்றது ஏன் என்பதை விஜய் விளக்கத்தான் வேண்டும்.