Share via:
நாம் தமிழர் சீமானுக்கும் தமிழக பா.ஜக. தலைவர் அண்ணாமலைக்கும்
இடையிலான பஞ்சாயத்து இப்போது திருச்சி சூர்யா மற்றும் சாட்டை துரைமுருகனுக்கும் இடையிலான
மோதலாக மாறியிருக்கிறது.
இந்த விவகாரத்தில் சாட்டை துரைமுருகன் நேரடியாக காவல் அதிகாரியிடம்
புகார் கொடுத்துவிட்டு, ‘பாஜகவின் தவறுகளையும் மோடி அரசின் 10 ஆண்டு கால ஆட்சி குறித்தும்
தொடர்ந்து சாட்டையில் பேசியதற்காக அண்ணாமலையின் தூண்டுதலின் பேரில் என்னைப் பற்றியும்
அண்ணன் சீமான் அவர்கள் குறித்தும் மிக இழிவாக பேசி அடிப்படை ஆதாரமற்ற அவதூறுகளை பரப்பி
வரும் பாஜகவை சார்ந்த திருச்சி சூர்யா என்ற நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி
திருச்சி மாவட்ட காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது’ என்று கூறியிருந்தார்.
அதோடு ’எல்லோருக்கும் இங்கு குடும்பம், தனிப்பட்ட வாழ்க்கையென்ற
ஒன்று இருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கைக் குறித்து பேசுவதை நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை.
அரசியல் மாண்பையும், நாகரீகத்தையுமே கடைப்பிடிக்க எண்ணுகிறோம்’ என்று சாட்டை துரைமுருகன்
கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்திருக்கும் திருச்சி சூர்யா, ’தனிப்பட்ட வாழ்க்கை
குறித்து பேசுவதில்லை என்று சொல்லும் சாட்டை துரைமுருகன் என்ன பேசியிருக்கிறார் பாருங்கள்’
என்று ரஜினிகாந்த் குறித்து சாட்டை துரைமுருகன் கெட்ட வார்த்தைகளில் பேசியிருக்கும்
வீடியோவை பதிவு செய்திருந்தார்.
அதோடு, ’உண்மை பேசினால் போலீஸ் கைது செய்யாது. முத்துக்குமார்
மனைவியை நீ திருமணம் செய்யவில்லை என்று சொன்னால் மன்னிப்பு கேட்கிறேன்’ என்று கிண்டல்
செய்திருக்கிறார்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினர், ‘சில்லறப்பய அண்ணாமலை’
என்ற ஹேஸ்டேக்கை வைரலாக்கி வருகிறார்கள். போகிற போக்கைப் பார்த்தால் அடிதடியில் தான்
பிரச்னை முடியும் போல் இருக்கிறது.