News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

லியோ திரைப்படத்தின் பிளாஷ் பேக்கை கிண்டல் செய்யும் ரசிகர்கள் அதனை லியோஸ்கேம் என்ற ஹேஷ்டேக்கில் இயக்குனர் லோகேஷ் கனகராஜை கிண்டல் செய்து வருகின்றனர்.


இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அனைத்து திரைப்படங்களும் எப்போதும் தனித்தன்மை வாய்ந்ததாக ரசிகர்களை கவர்ந்து வந்தது. அவரது கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களின் கற்பனைக்கும் எதிர்பார்ப்புக்கும் அப்பாற்பட்டு கவர்ந்து ரசிக்க வைத்தது.


இதற்கிடையில் கடந்த 19ம் தேதி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் இந்த எண்ணங்களை பொய்யாக்கிவிட்டது என்று சொல்லும் அளவுக்கு ரசிகர்கள் லோகேஷ் கனகராஜை கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்.


லியோ திரைப்படத்தின் முதல்பாதி மிகவும் விறுவிறுப்பாக அமைந்த நிலையில், இரண்டாம் பாகம் மிகவும் தொய்வாக எடுக்கப்பட்டுவிட்டது என்று லோகேஷ் கனகராஜே பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். மேலும் பிளாஷ்பேக் போர்ஷன் பொய்யாகக்கூட இருக்கலாம் என்று அவர் பேசியது நெட்டீசன்களாலும், ரசிகர்களாலும் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.


பிளாஷ்பேக்கை வேண்டுமென்றே குழப்ப வேண்டும் என்றும், தவறாக சொல்லப்பட்டது என்றும் கூறும் ரசிகர்கள் லோகேஷ் கனகராஜிடம் ஒரு கேள்வியையும் முன் வைத்துள்ளனர். அது என்னவென்றால்,இந்த பிளாஷ்பேக் பொய் என்றால், உண்மையான பிளாஷ்பேக்தான் என்ன? அதை எப்போதுதான் சொல்வீர்கள் என்று கேலியும், கிண்டலும் செய்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து #Leoscam என்பதும் தற்போது டிரெண்டிங்கில் உள்ள நிலையில் நாளை (நவ.1) லியோ திரைப்படத்தின் வெற்றி விழா நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link