News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ரகுல் பிரீத்சிங் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் அயலான். 2024ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அயலான் திரைப்படம் ரிலீசாக உள்ளது.


சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமான அயலானில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ரகுல் பிரீத்சிங், யோகிபாபு, இஷாகோபிகர், கருணாகரன், பானுப்பிரியா, ஷரத் கெல்கர், பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.


வேற்றுகிரகத்தில் இருந்து வரும் வேற்று கிரகவாசிக்கும், நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் இடையிலான இப்படத்தில் வரும் காட்சிகளுக்கான தொழில்நுட்பப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிகிறது.


இத்திரைப்படத்தின் கதாநாயகியான ரகுல் பிரீத் சிங்கின் தற்போதைய புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி அயலான் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link