Share via:
சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த வைகை எக்ஸ்பிரைஸ் சென்னை சைதாப்பேட்டை ரெயில் நிலையம் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது ரெயிலின் படிக்கட்டில் அமர்ந்தபடி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் படிக்கட்டில் அமர்ந்தபடி பயணம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது காலை நீட்டியபடி அமர்ந்திருந்த நிலையில் திடீரென்று அவரது இரண்டு கால்களும் சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்த நடைமேடையில் உரசியதாக தெரிகிறது. அதில் நிலைதடுமாறி நடைமேடையில் விழுந்த அவர் சுமார் 150 மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டார். பின்னர் சில விநாடிகளில் அதே ரெயிலின் அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த பதைபதைக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பயணத்தின் போது பயணிகளின் நிலை என்ன? அவர்கள் எவ்வாறு பயணம் செய்கிறார்கள் என்பது குறித்து ரெயில் அதிகாரிகள் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். மேலும் வைகை எக்ஸ்பிரஸ் போன்று வேகமாக செல்லும் ரெயிலில் பயணிகள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டியது கட்டாயமாகும். அவர்களை நம்பி குடும்பத்தார் வீட்டில் காத்துக் கொண்டிருப்பார்கள் என்ற உணர்வு ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இருந்தால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பிருக்காது.