அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பல இடங்களை கைப்பற்றி , முன்னாள் ஜனாதிபதியான   டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றர். இதை தொடர்ந்து, பல்வேறு பதவிகளுக்கான ஆட்களை நியமித்து வருகிற நிலையில் , அமெரிக்காவின் தேசிய சுகாதார மைய இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜெய் பட்டாச்சார்யா என்பவர் நியமனம் செய்யப்படுகிறார் என டிரம்ப் அறிவித்து உள்ளார். அமெரிக்காவை மீண்டும் சுகாதார நாடாக பட்டாச்சார்யா மற்றும் அவருடைய குழுவினர் உருவாக்குவார்கள் என டிரம்ப் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

இந்த  அறிவிப்புக்காக ட்ரம்புக்கு , ஜெய் தன்னுடைய நன்றிகளை தெரிவித்தார் .ராபர்ட் எப் . கென்னடி ஜூனியரை இந்த வாரத்தில், ஜெய் தனிப்பட்ட முறையில் சந்தித்து, தேசிய சுகாதார மையத்தின் உருமாற்றம் பற்றிய தன்னுடைய கருத்துகளை கூறி அவரின் பாராட்டுகளை பெற்றார் . இந்த மையத்தின் சீர்திருத்தம் பற்றிய தன்னுடைய தொலைநோக்கு பார்வையை குறிப்பிட்டு, முன்னுரிமை அளித்து மேற்கொள்ள வேண்டிய விசயங்களையும் எடுத்து கூறினார்.

 

ஜெய் பட்டாச்சார்யா, ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் சுகாதார கொள்கைக்கான பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய ஆராய்ச்சி கட்டுரைகள், பொருளாதாரம், புள்ளியியல், சட்டம், மருத்துவம், பொது சுகாதாரம் மற்றும் சுகாதார கொள்கைக்கான பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.

 

அமெரிக்காவில் நெருக்கடியான கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல முக்கிய கொள்கைகளை வகுத்ததில் முக்கிய பணியாற்றியவர்.1968ஆம்  ஆண்டு கொல்கத்தா நகரில் பிறந்த இவர் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.டி மற்றும் பிஎச்.டி. படிப்பையும் முடித்திருக்கிறார்.

 

டிரம்பின் அமைச்சரவையில், கேரளாவில் இருந்து புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி இடம் பெற்றிருக்கிறார். எலான் மஸ்க்குடன் இணைந்து அவர் பணியாற்றுவார். இதேபோன்று, ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் உறுப்பினரான, முதல் இந்து பெண்ணான துளசி கபார்டும் டிரம்ப் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link