Share via:
லட்டு விவகாரம் குறித்து பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதால் வருந்துவதாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன்கல்யாணிடம், நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 27ம் தேதி திரைக்கு வர உள்ளது மெய்யழகன் திரைப்படம். கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா நடிப்பில் தயாராகி உள்ள இத்திரைப்படத்தின் ப்ரமோஷன் பணிகளில் மொத்த படக்குழு ஈடுபட்டுள்ளது.
படப்ரமோஷனுக்காக ஆந்திராவிற்கு சென்ற கார்த்தியிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் லட்டு வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு கார்த்தி நகைச்சுவையாக அது ரொம்ப சென்சிட்டிவ் எனக்கு வேண்டாம் என்று பதில் அளித்தார். இதைத்தொடர்ந்து மோத்தி லட்டாவது வேண்டுமா என்று கேட்டதற்கு, லட்டே வேண்டாம் என்று கார்த்தி பதில் அளித்தது சர்ச்சையை கிளப்பியது.
இந்த பேச்சு சமூகவலைதளங்களில் பரவியதைத்தொடர்ந்து லட்டை கேலிக்குரிய பொருளாக்குவதா என்று ஆந்திர துணை முதல்வர் பவன்கல்யாண், கார்த்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். ஒரு பக்கம் கார்த்தி நடந்து கொண்டிருக்கும் நடப்பைதான் பேசினார். அதில் என்ன தவறு இருக்கிறது என்று பதிவிட்டனர்.
இந்நிலையில் நடிகர் கார்த்தி தன் எக்ஸ் பக்கத்தில், நான் தெரியாமல் பேசிய விஷயங்களுக்காக உங்கள் மீது வைத்துள்ள மதிப்பால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வெங்கடேஸ்வராவின் பக்தனாக நம் கலாச்சாரத்தை எப்போதும் மதிப்பவன் நான் என்று மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார்.