Share via:

தி.மு.க.வுக்கு விழும் இஸ்லாமியர் ஓட்டுகளை எப்படியாவது வாங்கவேண்டும்
என்பதற்காகவே நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார் என்பதை சொல்லப்படுவதை உறுதி
செய்வது போன்று ரம்ஜான் நோன்பு குடித்து ஒரு பரபரப்பைக் கிளப்பிவிட்டார். அதே பாணியில்
பா.ஜ.க.வின் கைப்படியில் பொம்மையாக ஆடிக்கொண்டிருக்கும் மூன்று கொத்தடிமைகளும் ரம்ஜான்
நாடகம் போட்டிருப்பது காமெடி வைரலாக மாறியிருக்கிறது.
மூன்று முறை முதலமைச்சர் என்றாலும் பக்கத்தில் கூட சேர்க்க மாட்டேன்
என்று ஓபிஎஸ்ஸை எடப்பாடி பழனிசாமி அடித்தே விரட்டிவிட்டார். பா.ஜ.க.வுடன் கூட்டணி என்பது
தற்கொலைக்கு சமம் என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்த டிடிவி தினகரன் இப்போது மோடி புகழ்
பாடிக்கொண்டு இருக்கிறார். மோடி தயவில் எடப்பாடியிடம் ஒரே ஒரு எம்.பி. சீட் வாங்கிவிட்டதால்
தமிழகத்தின் முக்கியமான கட்சி என்று பில்டப் கொடுத்து வருகிறார் ஜிகே வாசன்.
இந்த நிலையில் இந்த மூன்று பேரும் இஸ்லாமியர்களைப் போன்று தொப்பி
அணிந்துகொண்டு நோன்பில் கலந்துகொண்டு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். இந்த மூன்று கோமாளி
அடிமைகளை நம்பி எடப்பாடி பழனிசாமியின் கூட்டணி வேண்டாம் என்று அண்ணாமலை சொல்லிக்கொண்டு
இருக்கிறார் என்றால், அவர் எத்தனை பெரிய அதிபுத்திசாலி என்று கிண்டல் செய்கிறார்கள்.
அதேநேரம் இஸ்லாமியர்கள், ‘’பா.ஜ.க. ஆளும் உத்திரப் பிரதேசத்தில்,
மசூதிகளை துணிகளை கட்டி மூடுகிறார்கள்! ஹோலி கொண்டாடும் இந்துக்கள் மனது புண்படக் கூடாது
என்று! ஹோலி கொண்டாடும் இந்துக்கள் ஒரு மசூதியின் வாயிலை கம்புகள் கொண்டு இடிக்கிறார்கள்.
இவற்றை எல்லாம் கண்டிக்கத் துப்பில்லாத மூவரும் நாடகமாடுகிறார்கள்! கொடுமை’’ என்று
விமர்சனம் செய்கிறார்கள்.