Share via:
2025 ஆண்டுக்கான சட்டப்பேரவை முதல் கூட்டம் இன்று முறைப்படி தொடங்கியது.
அரசு எழுதிக்கொடுத்த உரையை கவர்னர் ஆர்.என்.ரவி முழுமையாகப் படிப்பாரா என்ற கேள்வி
எழுந்த நிலையில், கூட்டம் ஆரம்பித்த 3 நிமிடங்களில் அவையில் இருந்து வெளியேறி மீண்டும்
பரபரப்பை உருவாக்கியிருக்கிறார் ஆளுநர்.
கடந்த 2 ஆண்டுகளாக ஆளுநர் உரை என்பது சர்ச்சைக்குள்ளானதாகவே இருந்தது.
இந்நிலையில் சுமார் 9 மணி 15 மணி அளவில் சட்டமன்ற கூட்டத்திற்கு ஆளுநர் வருகை தந்தார்.
அவருக்கு காவல் துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆளுநர்
ரவிக்கு சபாநாயகர் அப்பாவு பொண்ணாடை போர்த்தி வரவேற்றார்.
9 மணி 30 நிமிடங்களுக்கு சட்டபேரவையானது தொடங்கியது. தமிழ்நாடு
சட்டப்பேரவையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்
வகையில் ஆளுநர் உரையை வாசிக்காமல் அதனை புறக்கணித்து வெளியேறினார்.
நாடாளுமன்றத்திலும் மற்ற மாநிலங்களிலும் சட்டப்பேரவை தொடங்கும்
நேரத்தில் முதலில் தேசிய கீதம் ஒலிக்கிறது. அதேபோல் தமிழகத்திலும் முதலில் தேசிய கீதம்
ஒலிக்க வேண்டும் என்று ஆளுநர் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், அதற்குப் பதிலாக தமிழ்த்
தாய் வாழ்த்து ஒலிபரப்பு செய்யப்பட்டதால் தேசிய கீதத்துக்கு அவமதிப்பு என்று சட்டப்பேரவையில்
இருந்து வெளியேறியதாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு வெளியானது. ஆனால், சற்று நேரத்தில்
ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு நீக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்தும் போதெல்லாம் முதலில்
தமிழ்த்தாய் வாழ்த்தும் பின்னர் தேசிய கீதமும் ஒலிக்கும். இது எழுபது ஆண்டு கால மரபு
ஆகும். தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிப்பதை அவமானகரமானதாக
ஆர்.என். ரவி நினைக்கிறாரென்றால் அவர் ஏன் இங்கு ஆளுநராக தொடர வேண்டும். தமிழ்த்தாய்
வாழ்த்தை அவமதிப்பதையே முதன்மை வேலையாக வைத்திருக்கிறார் என்று காங்கிரஸ் கட்சியினர்
ஆளுநருக்கு எதிராக வெளிநடப்பு செய்து போராட்டம் நடத்தினார்கள்.
சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியதால், அவர் படிக்க வேண்டிய
உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். 2025 வருடத்தை சர்ச்சையுடன் தொடங்கி வைத்திருக்கிறார்
ஆளுநர். சட்டசபையில் இருந்து வெளியேறியது போல் தமிழ்நாட்டின் ஆளுநர் பதவியிலும் இருந்து
நீங்கள் வெளியேறினால் தமிழ்நாட்டின் மக்களுக்கும் இந்திய நாட்டின் இறையாண்மைக்கும்
ரெம்ப நல்லது என்று உடன்பிறப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.