Share via:
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக இந்த மாதம் பணி செலுத்தும் பணி இன்று தொடங்கியுள்ளது மகளிர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்.
உரிமைத் தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் ரூ.1,000 வழங்க வேண்டும் என்றும் தமிழகத்தில் அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி தேர்வான மகளிர் வங்கிக்கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இம்மாதம் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒரு நாள் முன்னதாகவே சனிக்கிழமையான இன்று வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி தமிழகத்தில் 1.06 கோடி பெண்களுக்கு ரூ.1,000 செலுத்தம் பணியை இன்றே வங்கிகள் ஆரம்பித்துவிட்டன. இதனால் ஒரு நாள் முன்னதாகவே ரூ.1,000 கிடைக்க உள்ளதாக மகளிர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.