Share via:
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும்
நிலையில் அவர் நலம்பெற்று திரும்ப வேண்டுமென தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியில் இருந்து
முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் பிரார்த்தனை செய்கிறார்கள். இந்த நிலையில்
அவருக்கு நடைபெற்ற சிகிச்சை விபரம் தெரியவதுள்ளது.
நடிகர் ரஜினிகாந்துக்கு அடி வயிறு பகுதியில் வீக்கம் ஏற்பட்ட வலி
காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இன்று நடந்த சிகிச்சையில் அடி
வயிறுக்கு அருகில் ஸ்டெண்ட் வைக்கப்பட்டுள்ளது என்றும் இருதய மருத்துவர் சாய் சுதீஷ்
தலைமையிலான 3 மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். விஜய் சந்தர் ரெட்டி, நரம்பியல்
நிபுணர் பாலாஜி ஆகியோர் ரஜினிக்கு சிகிச்சை அளிக்கின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.
ரஜினிகாந்த் ஏற்கெனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்.
அதன் அடிப்படையில் சிறுநீர் கழிப்பதில் ஏற்பட்ட சிரத்தினால் அடிவயிற்றுக்குக் கீழே
வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சிறுநீரக செயல்பாட்டை ஆய்வு செய்தபோது சிறுநீரகத்துடன்
தொடர்புடைய நரம்பில் சதை வளர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அந்த சதை வளர்ச்சியை சரி செய்யும் வகையில் ஸ்டன்ட்
பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை கிட்டத்தட்ட 5 மணி நேரம் நடந்திருக்கிறது. இதயத்தில்
அடைப்பு ஏற்படும் சமயத்தில் ஸ்டன்ட் பொருத்தப்படுவது போலவே, சிறுநீரகத்திலும் நடத்தப்பட்டுள்ளது.
பொதுவாக இந்த ஸ்டண்ட் பொருத்தப்பட்டதும் அதன் செயல்பாட்டை ஆய்வு செய்து மூன்று நாட்களில்
வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். எனவே, வேறு பிரச்னை எதுவும் தென்படவில்லை என்றால் இரண்டு
நாளில் ரஜினி டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில் வரும் 10ம் தேதி தா.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த்
நடித்துள்ள, ‘வேட்டையன்’ வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ராணா, ஃபகத்
பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ரக்ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் நலம் பெறுவதற்கு அவரது ரசிகர்கள் இப்போதே கூட்டுப் பிரார்த்தனை செய்யத்
தொடங்கியுள்ளனர்.
நலம் பெற்று திரும்பட்டும்.