News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

செஃல்பி எடுக்க முயன்ற நேரத்தில் திருநீறை அழித்துவிட்டு போஸ் கொடுத்த திருமாவளவனின் செயல் இந்துக்களிடம் கடுமையான அதிருப்தியைக் கொடுத்தது. ஓட்டுக்காக குல்லா வைப்பது, கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொள்வது போன்று இந்துக்கள்ன் திருநீறையும் அவமானம் செய்துவிட்டார் என்று கொதித்தார்கள்.

இந்த விஷயத்தில் திருமா அமைதி காத்துவரும் நிலையில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் விடுத்திருக்கும் அறிக்கையில், ‘’கடந்த 19. 6.2025 அன்று திருப்பரங்குன்றம் கோவிலுக்குச் சென்று முருகனைத் தரிசனம் செய்தார் எமது தலைவர் எழுச்சித்தமிழர் திருமாவளவன். அவர்  அப்போது மக்களோடு மக்களாக சுமார் ஒரு மணி நேரம் முருகன் கோவிலில் சுற்றி வந்தார். அப்போது , அங்கிருந்த முருக பக்தர்கள் பலர் அவருடன்செல்பிஎடுத்துக்கொண்டனர்.

கடைசியாக அவர் கோவிலின் வாசலில் நின்றபோது புதுமண தம்பதியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். அப்போது நெற்றியில் வேர்வையைத் துடைத்துக் கொண்டார். அதனை வைத்து அரசியல் செய்யும் சனாதனிகள்திருமாவளவன் திருநீறை அழித்து இந்துக்களை அவமதித்து விட்டார்என வன்மத்தை கக்குகின்றனர். அப்படி அவமதிக்கும் நோக்கம் இருந்தால் அவர் திருநீறு வைத்தவுடனே அழித்திருக்க வேண்டும். அல்லது அதனை வைக்காமலே தவிர்த்திருக்கலாம். ஆனால், எமது தலைவர் அப்படி செய்யாமல் ஒரு மணி நேரம் திருநீறும் நெற்றியுமாகத்தான் இருந்தார்.

உண்மை இப்படி இருக்க, ஒரு அப்பட்டமான பொய்யை கொஞ்சமும் கூச்சமில்லாமல் பரப்பி வருகிறார்கள் குறிப்பாக, பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை அவர்கள் முருக பக்தர்கள் மாநாட்டில் பேசியிருக்கிறார். முருக பக்தர்கள் மாநாட்டில் கடவுள் முருகனைப் பற்றி பேசாமல் எமது இயக்கத்தின் தலைவரைப்பற்றி பேசுவது ஏன்? பாஜக தலைவர் பதவியைப் பறிகொடுத்த விரக்தியோ? விளம்பர உத்தியோ?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

பொதுவெளியில் அப்பட்டமாக திருநீறைத் துடைப்பது தெரிவதையே இப்படி வியர்வையைத் துடைத்தார் என்று சொல்கிறார்களே… யாருமே உண்மை பேச மாட்டார்களோ..?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link