Share via:
மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்தை திருமாவளவன் பேசி வருகிறார். அதாவது, ‘நாங்கள் தி.மு.க. கூட்டணியில் தான் இருக்கிறோம். இது கொள்கைக் கூட்டணி’ என்று சொல்கிறார். அதேநேரம், கூட்டணியை உடைக்கும் வகையில் 25 சீட் கேட்க திட்டமிடுவதாக செய்திகள் வெளியாகின்றன.
தினம் தினம் வெவ்வேறு இயக்கங்களில் இருந்து நிர்வாகிகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் வந்து இணைவதாக திருமாவளவன் செய்தி வெளியிட்டு வருகிறார். அதோடு 234 தொகுதிகளுக்கும் மாவட்டச் செயலாளர்கல் நியமனம் செய்து எல்லோருக்கும் பதவி கொடுத்து கட்சியை வளர்ச்சியடையச் செய்ய இருக்கிறோம் என்கிறார். இதன் பின்னணியில் எல்லாம் ஆதவ் அர்ஜுனா இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
கடந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி அடைந்த 60 தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் வாக்கு வங்கியே துணை புரிந்தது என்று ஆதவ் அர்ஜுனா ஒரு சர்வே எடுத்திருக்கிறாம். இந்த சர்வே படி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் இல்லையென்றால் ஒட்டுமொத்தமாக தி.மு.க. வரும் தேர்தலில் இப்போது அ.தி.மு.க. வெற்றி அடைந்திருக்கும் அளவில் சுமார் 70 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரியவந்திருக்கிறதாம்.
ஆகவே, இந்த புள்ளிவிவரங்கள் அடிப்படையில் வரும் 2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 25 தொகுதிகள் கேட்கப்படும் என்றும் இதில் குறைந்தது 15 தொகுதிகள் கிடைத்தால் மட்டுமே கூட்டணி வைக்கப்படும் என்றும் ஆலோசனை நடந்திருக்கிறது. தன்னுடைய கட்சிக்கு இத்தனை செல்வாக்கு இருக்கிறதா என்று திருமா ஆச்சர்யப்பட்டு ஆதவ் சொல்வதை அப்படியே கேட்கிறார். ஆகவே, தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் 25 லட்சியம் 15 நிச்சச்யம் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். இதற்காகவே கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகள் தீவிரம் அடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று தி.மு.க.வினரிடம் பேசினோம். ‘’வெளியே என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்வார்கள். கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு வந்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்கள். கொடுப்பதை வாங்கிக்கொண்டு போவார்கள். அதற்கு சம்மதமில்லை என்றால் கூட்டணி மாறலாம். இவருடைய வாக்குகளை ஈடு செய்வதற்கு கமல்ஹாசன் வாக்குகள் வந்துவிடும்’’ என்கிறார்கள்.
திருமாவளவன் வீரத்தைப் பார்க்கலாம்.