Share via:
மீடியாக்களிடம் எப்போதும்
ஃப்ரெண்ட்லியாக இருக்கும் திருமாவளவன் இப்போது கையெடுத்துக் கும்பிட்டு ஓடிப்போவது
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கூட்டணிக்
குழப்பம், விஜய் சர்ச்சையில் வாய் திறக்கக்கூடாது என்று தி.மு.க. எச்சரிக்கை கொடுத்திருப்பதாக
சொல்லப்படுகிறது.
அரியலூர் மாவட்ட
ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்
தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். அப்போது, தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி
ஆட்சிக்கு வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் கோபமடைந்த
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பொருத்தமில்லாத கேள்வி… விஜய்க்கு
என்னாத்துக்கு இந்த ஹைக் என்று கூறி கையெடுத்துக் கும்பிட்டு கிளம்பிவிட்டார்.
இது குறித்து தி.மு.க.வினர்,
‘’கூட்டணி குழப்பம் உருவாக்குவதாக இருந்தால் வெளியே சென்றுவிடுங்கள்’’ என்று எச்சரிக்கை
செய்யப்பட்டிருக்கிறது. எனவே இனி திருமாவளவன் வாய் பேச மாட்டார்’’ என்கிறார்கள்.
இது குறித்து அ.தி.மு.க.வினர்,
‘’அதிமுக உட்கட்சி விசயம் பற்றி பொய் என்று தெரிந்தும் இணைப்பு சாத்தியமில்லை என தெரிந்தும்
கூட ஒ.பன்னீர்செல்வம் – சசிகலா இணைப்பு என்ற பொய் செய்தியை இரண்டு வருஷமா தொலைக்காட்சி
ஊடகங்கள், யூட்யூப் சேனல்கள் தொடர்ந்து பேசிட்டு இருக்காங்க ஆனால் அதற்கு ஒரு தடவை
கூட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோபப்படவில்லை. ஆனால் இப்போது திருமாவளவன்
பொறுமையிழந்து ஊடகங்களிடம் புத்தி இருக்கிறதா என கேட்கும் அளவுக்கு அடிமையாகி விட்டாரா?’’
என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
பேசினாலும் சிக்கல்
பேசாவிட்டாலும் சிக்கல்.