Share via:
கடந்த தேர்தலில் திமுகவிடம் இருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தல்
நிதி வாங்கியதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைத்துவருகின்றன. இந்நிலையில்
நான் மட்டுமா வாங்கினேன் வைகோ, திருமாவும் வாங்கினார் என்று போட்டுக் கொடுத்துள்ளார்.
இது குறித்து பேசிய முத்தரசன், ‘’திராவிட முன்னேற்ற கழகம் தேர்தலுக்கு
பணம் கொடுத்தது. கையில் கொடுக்கவில்லை, நடு ராத்திரியில் கொடுக்கவில்லை, திரை மறைவில்
கொடுக்கவில்லை. திமுகவின் வாங்கி கணக்கில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வங்கி
கணக்கிற்கு பணம் அனுப்பப்பட்டது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு அனுப்பப்பட்டது.
விசிக வுக்கு அனுப்பப்பட்டது. மதிமுகவுக்கு அனுப்பப்பட்டது. இந்திய முஸ்லீம் லீகிற்கு
அனுப்பப்பட்டது. பகிரங்கமான கணக்கு” என்று கூறியிருக்கிறார்.
அதாவது நாங்கள் மட்டும் கேடு கேட்ட பிழைப்பை நாங்கள் மட்டும் பிழைக்கவில்லை.
எல்லா கட்சிகளுமே திமுக விடம் விலை போனவர்கள் தான். நாங்கள் மட்டுமா கட்சியை திமுகவிடம்
அடகு வைத்தோம் என்று கேட்டிருக்கிறார்.
திமுகவிடம் நாங்கள் மட்டுமா பணம் பெற்றோம்.. விசிக திருமா 50 கோடி
, மதிமுக வைகோ 20 கோடி, இந்திய யுனியன் முஸ்லீம் லீக் காதர் மொய்தீன் 10 கோடி பெற்றதாக
சொல்லப்படுகிறது.
கூட்டணி தர்மம் என்றால் இதுதானோ..?