Share via:
கள்ளக்குறிச்சி சாராயச் சாவுகளுக்கு எதிரான விடுதலை சிறுத்தைகள்
போராட்டத்துக்கு அரசு அனுமதி கொடுக்கவில்லை என்றாலும், போராட்டம் நடத்துவோம் என்று
வள்ளுவர் கோட்டத்தில் திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார் திருமாவளவன்.
இந்த கூட்டத்தில் ஆவேசம் காட்டிய திருமாவளவன், ‘’மரக்காணம் கள்ளக்குறிச்சி
என்று நச்சு சாராயச் சாவுகள் தொடர்ந்து நடக்கின்றன. ஆகவே, தமிழ்நாடு அரசே முழு மதுவிலக்கை
நடைமுறைப்படுத்து! டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடு’ என்று ஆவேச கோஷம் எழுப்பி மாபெரும்
ஆர்ப்பாட்டம் நடத்தினார். ஆனால், சட்டசபையில் இவரது எம்.எல்.ஏ.க்கள் என்ன செய்கிறார்கள்?
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழந்தவர்களில்
பெரும்பாலோர் ஆதி திராவிடர்கள். அவர்களுக்கு விழிப்புணர்வுக்கு திருமா என்ன செய்தார்
என்ற கேள்வி எழுப்புபவர்கள், ‘ஒரு நாள் கூத்து போன்று டாஸ்மாக்கை தடை செய்’ என்று ஆர்ப்பாட்டம்
நடத்தினால் போதுமா? டாஸ்மாக்கை தடை செய்யவில்லை என்றால் தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாது
என்று அறிவித்து கடைகளை மூட வேண்டியதுதானே என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
ஆனால், இதற்கு திருமாவிடம் எந்த பதிலும் இல்லை. ஏனென்றால், போராட்டம்
அவரது அரசியலுக்கானது. தி.மு.க. கூட்டணி என்பது அங்கீகாரத்துக்கானது. இரண்டையும் விட்டுத்தரவே மாட்டார் திருமாவளவன் என்கிறார்கள்.
நல்லாத் தான் நடிக்கிறாங்கப்பா.