Share via:
மதுவிலக்கு மாநாடு நடத்தி அ.தி.மு.க.வுக்கு அழைப்பு விடுத்து புதிய
சர்ச்சை ஏற்படுத்தியிருக்கும் திருமாவளவன், ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கோரிக்கை
எழுப்பி கூட்டணிக்கு அடுத்த அணுகுண்டு போட்டிருக்கிறார்.
இதுகுறித்து திருமாவளவன், ‘’ஆந்திராவில் நடப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி, தனிப்பெரும்பான்மை
இருந்த பொழுதிலும் பெருந்தன்மையாக கூட்டணி ஆட்சி நடத்துகிறார் சந்திரபாபு நாயுடு’’
என்பதுடன், ‘தேர்தல் அரசியலில் நுழைந்தபோது விடுதலை சிறுத்தைகள் கட்சி எழுப்பிய கோரிக்கை,
‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு. கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம் எளிய மக்களுக்கும்
அதிகாரம்’ என்று பேசியிருக்கிறார்.
இது குறித்து பேசும்
திருமா ஆதரவாளர்கள், ‘’திருமா எழுப்பியிருக்கும் முழக்கம் மிக நியாயமானது. திமுக கூட்டணியிலேயே
தமிழகம் எங்கும் கிளை கட்டமைப்பு உள்ள ஒரே கட்சி விசிக மட்டும் தான். திமுக என்னும்
குடும்ப கம்பெனி தங்கள் வெற்றிக்கு மட்டுமே விசிகவை பயன்படுத்திகிறது என்பது மறுக்கமுடியாத
உண்மை.
திமுக கூட்டணியில்
விசிக இல்லையென்றால் திமுக வீழ்வதை யாராலும் தடுக்க முடியாது. கடந்த ஐந்து ஆண்டுகளில்
தொடர்ச்சியாக ஐந்து தேர்தல்களில் திமுக கூட்டணி வெற்றி பெறுவதற்கு விசிக மிக முக்கியமான
காரணம். ஆட்சியில் விசிக பங்கு கேட்பதில் தவறில்லை…’ என்று குரல் கொடுத்துவருகிறார்கள்.
இந்த நிலையில்,
’’ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு வேண்டும்’’ என்று பேசிய வீடியோவை பதிவிட்ட
திருமாவளவன் அதனை இப்போது டெலிட் செய்திருக்கிறார்.
இப்போது இந்த விவகாரம்
குறித்து பேசும் விடுதலை சிறுத்தைகளின் ஆதரவாளர்கள், ‘’மாவட்டச் செயலாளர் பொறுப்பை
பெண்களுக்கும் தலித் அல்லாதோர், இளைஞர்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் வழங்குவது என்று
தலைவர் அறிவிப்பு செய்தார்..’ என்று சமாளிக்கிறார்கள்.
போகிற போக்கைப் பார்த்தால்
எடப்பாடி பழனிசாமியிடம் விடுதலை சிறுத்தைகள் சேர்வது உறுதி போலிருக்கிறது.