Share via:
மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வும், மக்களுக்கு பாதுகாப்பு
கொடுக்க வேண்டிய காவல் துறை அதிகாரியும் ஆட்கடத்தல் செய்து அட்டூழியம் செய்திருக்கும்
அநியாயம் மக்களை அலறவிட்டுள்ளது. இந்த நிலையில் பூவை ஜெகன்மூர்த்திக்கு திருமாவளவன்
கூறியிருக்கும் ஆதரவு கருத்து சர்ச்சையாகியிருக்கிறது.
நடந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர் பேசுகையில், ‘’திருவள்ளூரை
சார்ந்த தலித் இளைஞன் தனுஷ், தேனி மாவட்டத்தை சார்ந்த ‘வடுக’ வகையறா பெண்ணை காதலித்து
பெண் வீட்டார் எதிர்ப்பையும் மீறி கலப்பு மணம் செய்கிறான். சமுக மற்றும் பொருளாதார
ரீதியாக பெரும் பலம் கொண்ட பெண்ணின் குடும்பம் வழக்கம்போல பெண்ணை பிரிக்க முயற்சிகள்
மேற்கொள்கிறது.
தலித் இளைஞனைப் பிரிக்க வேண்டும் என்பதால் வேறு ஆட்களை பயன்படுத்தினால்
சிக்கலாகிவிடும் என்பதால் தலித் தலைவர்களில் ஒருவரான பூவை ஜெகன்மூர்த்தியை அணுகி பேரம்
பேசுகிறார்கள். இதற்கு தலித் சமுகத்தை சார்ந்த பெண் காவல் அதிகாரி ஒருவர் மூலம் மற்றொரு
தலித் சமுகத்தை சார்ந்த காவல்துறை உயர் அதிகாரியான எடிஜிபி ஜெயராமனை அணுகுகிறார்கள்.
பணமூட்டைகள் கைமாற, தம்பதியினரை பிரிக்கும் பொறுப்பை சிரம்மேல் ஏற்று களத்தில் இறங்கும்
எடிஜிபி ஜெயராமன் தலித் விடுதலையே தன் வாழ்வு என தவவாழ்வு வாழும் சட்டமன்ற உறுப்பினர்
பூவை மூர்த்தியோடு ஆலோசனை நடத்துகிறார்.
அதன்படி தன் அலுவலக பணிகளுக்கென்று அரசாங்கம் தந்திருக்கும் வாகனங்களில்
ஒன்றை எடிஜிபி ஜெயராமன் இந்த உயர்ந்த சேவைக்காக வழங்க, அதில் ஏறிய பூவை மூர்த்தியின்
தளபதிகள் தங்களை காவல்துறையினர் என அறிமுகப் படுத்தியவாறு புதுமணத் தம்பதிகளை தேடி
அலைகின்றனர்.. விஷயம் தெரிந்து தம்பதி தலைமறைவாகிவிட தளபதிகள் தனுஷின் தம்பியை தூக்கிக்
கொண்டு போகிறார்கள்.. அடுத்த சில நிமிடங்களில் நடந்த விஷயங்களை தனுஷின் குடும்பத்தினர்
அவசர அழைப்பு 100 க்கு அழைத்திருக்கிறார்கள்.
காவல்துறை கடமையில் இறங்கியிருக்கிறது. விசாரணையில் இளைஞனை கடத்திய
கார் எடிஜிபியின் வாகனம் என்பது தெரியவரவும் உஷாரானார் எடிஜிபி. சற்றே நேரத்தில் இளைஞனை
கடத்திய கும்பல் அவனை விடுத்து விட்டு மறைந்தது. இந்த விவகாரம் தெரியவந்ததும் அதிகார
மையம் அதிர்ந்து போனது. அடுத்தடுத்து உத்தரவுகள் பறக்க குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு
ஒப்புதல் வாக்குமூலமும் பெறப்பட்டபின் பூவை மூர்த்தியை விசாரிக்க சென்றனர். நூற்றுக்கணக்கான
ஆதரவாளர்கள் புடை சூழ காவல்துறையினர் தடுக்கப்பட்டனர். அந்த பகுதியில் சட்டம் ஒழுங்கு
சீர்குலையும் அளவுக்கு பிரச்சனை பூதாகரமாக தலைமறைவானார் பூவை மூர்த்தி.
இதன் தொடர்ச்சியாக இன்று பூவை சார்பில் முன் பிணை கேட்டு உயர்நீதிமன்றத்தை
அணுக ஆவணங்களை பார்த்து கடுப்பான நீதிபதி எடிஜிபியை கைது செய்ய உத்தரவிட்டதுடன் பூவை
மூர்த்திக்கு பாடம் எடுத்திருக்கிறார். தலித் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில்
திருமாவளவன் அந்த குடும்பத்துக்கு ஆதரவாக நில்லாமல் பூவை ஜெகன்மூர்த்திக்கு ஆதரவு காட்டியிருக்கிறார்.
அதாவது மக்கள் பிரதிநிதி என்பதால் காவல் துறை சம்மன் கொடுத்தால் போதும், எதற்கு இத்தனை
போலீஸ் என்று கேள்வி கேட்கிறார்.
அரசியல் போட்டியாளர் என்றால்ம் பூவை ஜெகன்மூர்த்தியை திருமாவளவன்
பாதுகாக்கும் வகையில் பேசியிருப்பது கடும் சர்ச்சையாகியிருக்கிறது. பாதிக்கப்பட்டது
தலித் குடும்பம் என்பதை திருமா மறந்துவிட்டாரே… அவரும் கட்டப்பஞ்சாயத்து பார்ட்டியோ
என்ற கேள்வியே இப்போது எழுகிறது.