Share via:
இஸ்லாம் வழிபாட்டுத்தலங்களை இடித்துவிட்டு, அங்கெல்லாம் இந்து
கோயில்களைக் கட்டுவதில் பாஜக தீவிரம் காட்டிவருகிறது. அதேபோல், காந்திக்கு இணையாக கோட்சே
புகழ் பாடப்படுகிறது. சாவர்க்கருக்கு என்று தனியே வரலாறு உருவாக்கப்படுகிறது.
இந்த நிலையில் பள்ளி மாணவர்களிடம் பாஜக அமைச்சர் கூறிய அறிவியல்
சமாச்சாரம் எக்கச்சக்க சர்ச்சையை எழுப்பியிருக்கிறது. அதாவது, முதன்முதலில் விண்வெளிக்குப்
போனவர் அனுமன் என்று கூறியிருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்து சு.வெங்கடேசன் எம்.பி., ‘முப்பத்தி முக்கோடி
தேவர்கள் விண்வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது அனுமன்தான்
முதன் முதலில் விண்வெளிக்கு போனது என்று அனுராக் தாக்கூர் கண்டறிந்துள்ளது சாதாரண விசயமல்ல,
பாஜக வினரின் அறிவு செயல்பாடு நாளுக்கு நாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது. நீல் ஆம்ஸ்டிராங்
பெயரை அறிவியல் பாடத்திலிருந்து நீக்க பிஎம் ஶ்ரீ பள்ளிகளுக்கான சுற்றறிக்கையை தர்மேந்திர
பிரதானிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம்…’ என்று கிண்டல் செய்திருக்கிறார்.
இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகுதோ..?