Share via:
சனாதனம் குறித்து நான் பேசியதில் எந்த தவறும் கிடையாது. எதுவாக இருந்தாலும் சட்டப்படி அதனை சந்திப்போம் என்று அமைச்சர் உதயநிதி மீண்டும் உறுதிபட தெரிவித்தார்.
தி.மு.க. இளைஞர் அணி சார்பில் தொடங்கப்பட்டுள்ள நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனின் சென்னை அசோக்நகரில் உள்ள அவரது அலுவலகத்திற்கு நேரில் சென்ற அமைச்சர் உதயநிதி அவரிடம் கையெழுத்து பெற்றார். இந்த சந்திப்பின் போது விடுதலைசிறுத்தைகள் கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உடனிருந்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி பேசும்போது, ‘‘நீட் தேர்வுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் கையெழுத்து இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் நாடகம் என்று விமர்சித்து வருகின்றனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற மசோதாவை ஆதரித்து அ.தி.மு.க.வினரும் சட்டமன்றத்தில் கையெழுத்திட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது தவறு என்றும், காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்தார். அவர் பேசும்போது, ‘‘நான் பேசியது எதுவும் தவறு கிடையாது எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திப்போம். பேசிய வார்த்தையை நான் மாற்றிக்கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக பேசியது குறிப்பிடத்தக்கது.