Share via:

தமிழகத்தில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி ஆட்சி அமையும் என்று
அமித் ஷா பேசிய நேரத்தில் எடப்பாடி பழனிசாமி எதுவும் பேசவில்லை. அமைதி காத்தார். இந்த
நிலையில், தமிழகத்தில் கூட்டணி அரசு கிடையாது. கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றே அமித்ஷா
பேசினார் என்று எடப்பாடி பழனிசாமி பேசியதை அடுத்து பா.ஜ.க.வினர் உஷ்ணத்தில் பொங்குகிறார்கள்.
இன்று சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் ஸ்டாலின் வேண்டுமென்றே சுயாட்சி பிரச்னை எழுப்புவதாகக் குறிப்பிட்டார்.
இது குறித்து எடப்பாடி பழனிசாமி, ‘’கடந்த 16 வருஷம் மத்திய அமைச்சர்கள் அத்தனை பேர்
கைல வெச்சிக்கிட்டு, காங்கிரஸ் அரசை மிரட்டி மாநில சுயாட்சி நிறைவேற்றி இருக்கலாம்
ஆனா, இனி ஜென்மத்துக்கும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இல்லை என்று ஆன பிறகு, தேர்தலுக்காக
மாநில சுயாட்சி நாடகத்தை ஸ்டாலின் போடுகிறார்’’ என்று போட்டுத் தாக்கினார்.
அடுத்து தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா பேசியது குறித்து
கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எடப்பாடி பழனிசாமி, ‘’பா.ஜ.க.வுடன் எந்தவித கூட்டணி
ஆட்சி்யும் இல்லை. முழுமையாக அதிமுகவே ஆட்சி நடத்தும். தமிழகத்தில் அதிமுக கூட்டணியில்
பாஜக உள்ளது. அதற்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை! அமீத்ஷா சொல்வது டெல்லிக்கு மோடி
தமிழ்நாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி. அவர் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றே
சொன்னார், இதை கூட்டணி ஆட்சி என்று வார்த்தை விளையாட்டு விளையாடாதீர்கள்’’ என்று கூறினார்.
இதையடுத்து எடப்பாடிக்கு இரண்டை வருஷம் பா.ஜ.க.வுக்கு இரண்டரை
வருஷம் என்று மகிழ்ச்சியுடன் இருந்த பா.ஜ.க.வினர் பதறிவிட்டனர். பா.ஜ.கவினர், ‘’இந்தியா
முழுவதும் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி தான் நடத்துகிறது. அதையே அமித் ஷா சொன்னார். தமிழ்நாட்டுக்கு
எப்படி அது மாறும்? அமித்ஷா எப்படி மாற்றி பேசுவார்?ஆட்சியில் பங்கு பற்றி நயினார்
விளக்கம் அளிக்க வேண்டும், எடப்பாடி பழனிசாமியை நம்பக்கூடாது என்று பா.ஜ.க.வினர் கொதிக்கிறார்கள்.
நயினார் நாகேந்திரன் என்ன செய்யப்போகிறார்..? அண்ணாமலை போன்று
விளாசுவாரா எடப்பாடி பழனிசாமி போல அமைதி காப்பாரா..?