News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

லியோ திரைப்படத்தின் தணிக்கை செய்யப்படாத டிரெய்லரை வெளியிட்ட திரையரங்குகளுக்கு தற்போது பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான், கவுதம் மேனன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் லியோ. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நாளில் இருந்தே பிரச்சினை என்றுதான் சொல்ல வேண்டும். காஷ்மீர் படப்பிடிப்பின் போது நிலநடுக்கம். மேலும் ரசிகர்களின் தொல்லை என பிரச்சினைக்கு மேல் பிரச்சினை.


அதைத்தொடர்ந்து லியோ இசை வெளியீட்டு விழாவும் ரத்து செய்யப்பட்டது. இதனால் துவண்டு போயிருந்த ரசிகர்களுக்கு டிரெய்லர் ஒன்றே ஆறுதல் என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது அதுவும் பிரச்சினையாகி உள்ளது.


யூடியூப்பில் வெளியான லியோ திரைப்படத்தின் டிரெய்லரில் நடிகர் விஜய் ஆபாசமான வார்த்தைகளை பேசியுள்ளது தணிக்கை செய்யப்படாமல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் ஒரு சில திரையரங்குகளிலும் லியோ திரைப்படத்தின் டிரெய்லர் திரையிடப்பட்டது.


இதற்கிடையில் ஆபாச வார்த்தைகளை தணிக்கை செய்யாமல் திரையரங்குகளில் டிரெய்லர் வெளியிடப்பட்டதால் அதற்கு விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட திரையரங்குகளுக்கு மத்திய தணிக்கை வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அந்த நோட்டிசில் இது பெரும் குற்றம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


நடிகர் விஜய்யின் குட்டி ஸ்டோரி, இசை வெளியீட்டு விழா உள்ளிட்டவை ரத்தான நிலையில், லியோ திரைப்படத்தை பிரமோட் செய்வதற்காகக் கூட இப்படி நடந்து இருக்கலாம் என்றும் ஒரு பேச்சு அடிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link