Share via:
திருமணம் என்ற பந்தத்தில் ஆண், பெண் இணைவது வாடிக்கையானது. ஆனால் சில சமயங்களில் ஆண் ஆணையும், பெண் பெண்ணையும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இதற்கு ஒரு தரப்பில் எதிர்ப்பும், மற்றொரு தரப்பில் ஆதரவும் இருக்கத்தான் செய்கிறது. பல்வேறு நாடுகளில் இதற்கு தடையும் கிடையாது.
ஆனாலும் வித்தியாசமாக இன்னொரு திருமண பந்தம் இருக்கிறதென்றால் அதுதான் சோலாகாமி என்ற முறை. அதாவது தன்னைத்தானே திருமணம் செய்து கொள்ளும் முறை. வெளிநாடுகளில் மணமகள், மணமகன் இன்றி தன்னைத்தானே திருணம் செய்து கொள்வது வாடிக்கையாகிவிட்டது. இது சட்டப்படி அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும் பலர் இதனை செய்து வருவது வேதனையாக உள்ளது. எதிர்பாலினம் மீது ஈர்ப்பும், நம்பிக்கையும் இல்லாதவர்கள் இதுபோன்ற சோலாகாமி திருமணத்தை செய்து கொள்கின்றனர்.
அந்த வகையில் கடந்த 2023ம் ஆண்டு துருக்கியைச் சேர்ந்த இன்ஸ்டா பிரபலமான குப்ரா அய்குட் என்ற 26 வயது பெண் சோலாகாமி முறையில் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார். அவர் தனது 5வது மாடியில் இருந்து திடீரென்று குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார் ஒரு கடித்ததை கைப்பற்றியுள்ளனர். மேலும் கடைசியாக அவர் பதிவிட்ட வீடியோவில், உடல் எடையை அதிகரிப்பது மிகவும் சவாலாக உள்ளது. நான் மிக விரைவில் எடையை அதிகரித்தே ஆகவேண்டும் என்ற சூழ்நிலை இருக்கும் போது, தினமும் ஒரு கிலோ எடை குறைந்து வருகிறேன்’’ என வேதனையுடன் பதிவிட்டிருந்தார். ஒருவேளை இதுதான் தற்கொலைக்கு காரணமாக இருக்குமோ என்றும், பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.