Share via:
பிரபல நடிகையான ஜெயப்பிரதா தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாததால் அவருக்கு உத்தரபிரதேச நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் எம்.பி.யும் பிரபல நடிகையுமான ஜெயப்பிரதா என்றால் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த சலங்கை ஒலி திரைப்படம்தான் பலரது நினைவுக்கு வரும். தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஜெயப்பிரதா 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். தமிழில் அவர் நடித்த நினைத்தாலே இனிக்கும் திரைப்படத்திலும் தசாவதாரம் திரைப்படத்தில் கேமியோ ரோலிலும் நடித்திருந்தார்.
திரைத்துறை மட்டுமல்லாமல் அரசியலிலும் கால் பதித்த ஜெயப்பிரதா கடந்த 1999களின் பிற்பகுதியில் தெலுங்குதேசம் கட்சியின் இணைந்து பணியாற்றினார்.
அதன் பின்னர் அங்கிருந்து விலகி, சமாஜ்வாடி கட்சியில் இணைந்த நிலையில், 2004ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார். அதன் பின்னர் 2019ல் பா.ஜ.க.வில் இணைந்தார். அந்த காலகட்டத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக ஜெயப்பிரதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இவ்வழக்கு உத்தரபிரதேச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஏற்கனவே இந்த வழக்கில் ஆஜராகாமல் இருந்த ஜெயப்பிரதா, இன்றும் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நடிகை ஜெயப்பிரதா ஜாமீனில் வெளியில் வர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது. எனவே ஜெயபிரதா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.