Share via:
காசாவில் இதுவரை 447 குழந்தைகள் பலியாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான மோதல் ஒரு வாரத்தை தாண்டி நடந்து கொண்டிருக்கிறது. 3 ஆயிரத்துக்கும் மேல் கொல்லப்பட்டுள்ள நிலையில் காசாவில் கர்ப்பிணிகள், குழந்தைகள் என அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் காசாவில் இருந்து 10 லட்சம் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. காசாவில் தாக்குதல் நடத்தினால் பிணைக் கைதிகளை கொலை செய்வோம் என்று ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காசாவில் இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதல்களில் இதுவரை 447 குழந்தைகள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சித தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் காசாவில் 1,417 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் 248 பேர் பெண்கள் என்ற தகவல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்ததொடர் தாக்குதல்களில் இதுவரை 1,200 பாலஸ்தீனியர்களும், 1,300 இஸ்ரேல் நாட்டினரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தொடர் தாக்குதல்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையையும், போர் நடவடிக்கைகள் குறித்தும் ஐ.நா. சபை உற்று கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

